________________
ஏலாதி 55
- பாடலொ டாடல் பயின்றுயர் செல்வனாய்க்
கூடலொடூடலுளான் கூர்ந்து ' (பா. 51) எனவும் போதரும் பல பாடற் பகுதிகளால் நன்குணரலாம். சமண சமயத்தினரான கணிமேதாவியார் இத்தகைய கருத்துக்களைத் தம் நூலில் வலியுறுத்திச் செல்லுதல் பெருவியப்பிற்குரியதாகும். இப்பிறப்பில் தம் வரலாற்றைப் புலவர் பெருமக்கள் விரும்பி எழுதுமாறு பெருவாழ்வெய்தியுள்ளவர்கள், முற் பிறப்பில் மாண வர்கட்கு உணவு, உடை, எழுத்தாணி, புத்தகம் முதலியவற்றை வழங்கியவர்கள் என்று இவ்வாசிரியர் ஒருபாடலில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதொன்றாம்.1 இவர் ஏலாதியில் ஒரு வெண்பா வில் வீடுபேற்றை மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர். அப்பாடல், * பொய்தீர் புலவர் பொருள்புரிந் தாராய்ந்த மைதீர் உயர்கதியின் மாண்புரைப்பின்-மைதீர் சுடரின்று சொல்லின்று மாறின்று சோர்வின் றிடரின் றினிதுயிலு மின்று'2 என்பதாம். இதன் கருத்து ஐயனாரிதனாரது புறப்பொருள் வெண்பா மாலையிலுள்ள
- பொய்யில் புலவர் புரிந்துறையு மேலுலகம் ஐயமொன் றின்றி யறிந்துரைப்பின்-வெய்ய பகலின் றிரவின்று பற்றின்று துற்றின்
றிகலின் றிளிவரவு மின்று'3 என்ற பாடலின் கருத்தோடு பெரிதும் ஒத்திருத்தல் காண்க. 1. ' ஊணொடு கூறை யெழுத்தாணி புத்தகம் பேணொடு மெண்ணு மெழுத்திவை-மாணொடு கேட்டெழுதி யோதிவாழ் வார்க்கீந்தா ரிம்மையான் வேட்டெழுத வாழ்வார் விரிந்து ' (ஏலா . பா. 63) 2. ' ஏலா. பா. 66.1 3. ' புறப்பொருள் வெண். பொதுவியல், 4.