உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

9. கார் நாற்பது இந்நூல் நாற்பது வெண்பாக்களையுடையது ; கார்காலத் தின் சிறப்புக்கள் இந்நூலில் விதந்து கூறப்பட்டிருத்தலால் இது கார் நாற்பது என்னும் பெயர் எய்துவதாயிற்று. இது காலம் பற்றித் தோன்றிய ஒரு நூல் என்பதை,

  • காலம் இடம்பொருள் கருதி நாற்பான்

சால வுரைத்தல் நானாற் பதுவே ' என்னும் இலக்கண விளக்கப்பாட்டியற் சூத்திரத்தால் நன் கறியலாம். கார்காலம் முல்லைத்திணைக்குரிய பெரும்பொழு தாகும். எனவே, முல்லைத்திணைக்குரிய அகவொழுக்கமே இந் நூலில் யாண்டும் கூறப்பட்டிருத்தல் காணலாம். இனி, இல்லறம் நிகழ்த்தும் தலைவன் ஒருவன் வேந்தற் குற்றதுணையாய்ப் பகையரசரோடு போர்புரியப் போகவேண்டி யிருந்தமையால், தன் பிரிவினைக் காதலிக்குரைத்து, கார்ப்பருவத் தொடக்கத்தில் தான் மீண்டுவருவதாகவும் அதுகாறும் அவள் பிரிவாற்றி யிருக்குமாறும் கூறிச்செல்லவே, அங்ஙனமே ஆற்றி யிருந்த தலைவி அவன் குறித்த பருவத்தில் வாராமைகண்டு பெரிதும் வருந்தினாளாக, அதனைக் கண்ட தோழி தலைவியைப் பலவாறாக மென்மொழிகளால் ஆற்றுவித்துக் கொண்டிருக்க, பிரிந்து சென்ற தலைமகனும் மீண்டுவந்து தலைமகளை யடைந்தான் என்ற வரலாறு இந்நூலில் விரித்துக் கூறப்பட்டுள்ளது. நாடக வழக்குப்போல், தோழி, தலைமகள், தலைமகன், பாகன் என்போர் கூற்றுக்களை இவ்வரலாற்றில் நூலாசிரியர் முன்னிலையில் வைத் திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கார்காலத்தின் சிறப்பை யெல்லாம் தனித்தனியாகக் கூறினால் அவை படிப்போர்க்கு இன்பம் பயவாவாதலின் அவற்றை முல்லைத் திணைக்குரிய உரிப் பாருளாகிய இருத்தலை நிலைக்களனாகக் கொண்ட வரலாறொன் 'ால் அமைத்து இந்நூலை ஆசிரியர் இயற்றியிருப்பது மிகப் பாராட்டற்பாலது. | காற்நாற்பது என்னும் இந்நூலின் ஆசிரியர் மதுரைக்கண் எங் கூத்தனார் என்ற புலவர் ஆவர். இவர் சிறந்த புலமை