________________
58| தமிழ் இலக்கிய வரலாறு யுடையவர் என்பது இந்நூலால் நன்கறியக்கிடக்கின்றது. இப் புலவர் பெருமான் மதுரைமாநகரில் வாழ்ந்தவர் என்பதும் இவ ருடைய தந்தையார் கண்ணனார் என்ற பெயருடையவர் என் பதும் இவர் கூத்தனார் என்னும் இயற் பெயருடையவர் என் பதும் தெளிவாகப் புலப்படுகின்றன. இவர் தம் நூலின் முதற் பாடலில் திருமாலையும் பத்தொன்பதாம் பாடலில் பலராமனை யும் கூறியிருத்தலால் சமயக் கொள்கையில் வைணவராயிருத் தல் வேண்டும் என்று கருதுவதற்கு இடமுளது. ஆனால், இவர் கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் நாடெங்கும் மக்கள் விளக்கேற்றி வைத்துக்கொண்டாடும் சிவபெருமானுக்குரிய பண்டை விழாவை இருபத்தாறாம் பாடலில் குறிப்பிட்டுள்ளனர். திருமால் முல்லை நிலத்திற்குரிய தெய்வமாதல் பற்றி அக்கடவுளை இவர் முதற்பாடலில் குறித்துள்ளனர் என்றும் கூறலாம். இவற்றையெல்லாம் ஆராயுமிடத்து, இவர் பிறப்பால் வைணவர் என்பதும் ஆனால் சமரசக் கொள்கையினர் என்பதும் நன்கு தெளியப்படும். இவர் இயற்றிய வேறு நூலாதல் செய்யுளாதல் இக்காலத்தில் கிடைக்கவில்லை. இவரைப்பற்றிய பிற செய்தி களும் புலப்படவில்லை. இவரது கார் நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இது கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்ட இருண்ட காலத்தில் கி. பி. நான்காம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என லாம். ஆகவே, இந்நூல் திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது முதலான நூல்களுக்கு முற்பட்டது என்பது ஒருதலை. இந்நூலிலுள்ள வெண்பாக்கள் பெரும்பாலும் ஒருஉஎதுகை 1, ' ( பொருகடல் வண்ணன் புனை மார்பிற் சர்போல் திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ வருது மெனமொழிந்தார் வாரார்கொல் வானம் கருவிருந் தாலிக்கும் போழ்து.' (கார்நாற்பது, பா.1) * நாஞ்சில் வலவனிறம்போலப் பூஞ்சினை செங்கால் மராஅந் தகைந்தன -பைங்கோத் செடிபொலி முன்கையாள் தோள் துணையா வேண்டி கெடுவிடைச் சென்றதென் னெஞ்சு ' (காற்நாற்பது, பா. 19)