பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கார்நாற்பது 59 மிகுந்தும் பலவிகற்பமாகவும் இன்னிசையாகவும் இருத்த லொன்றே, இது மேலே குறிப்பிட்ட நூல்களுக்குக் காலத்தால் முற்பட்டது என்பதை வலியுறுத்துவதாகும். இந்நூலின் சிறப்பினை, 1 நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப் புலமெலாம் பூத்தன தோன்றி சிவமொழி தூதொடு வந்த மழை' என்ற பாடலால் அறிந்துகொள்ளலாம். 1. கார்நாற்பது, பா. 26.