பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 10. ஐந்திணை ஐம்பது இஃது, ஒவ்வொரு திணைக்கும் பத்துப்பாக்களாக ஐந்து திணைகட்கும் ஐம்பது பாக்களைத் தன்னகத்துக் கொண்டமை பற்றி ஐந்திணை ஐம்பது என்னும் பெயர் எய்தியது ; அகத்திணை யொழுக்கங்களைச் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் இயல்பி னது. இதிலுள்ள செய்யுட்களுள் பல நேரிசை வெண்பாக்க ளாகவும், சில இன்னிசை வெண்பாக்களாகவும் உள்ளன. அவ் வெண்பாக்கள் சிறந்த நடையும் பொருள்வளமும் கொண்டு மிளிர்வதால் கற்போர் நெஞ்சத்தைப் பிணிக்குந் தன்மையவா யுள்ளன. எனவே, இந்நூற்பாயிரத்தில் - ஐந்திணையைம்பது மார்வத்தின் ஓதாதார்--செந்தமிழ் சேரா தவர் ' என்று கூறப் பட்டிருப்பது சாலப்பொருத்தமுடையதேயாம். இந்நூல் பதி னெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் மாறன் பொறையனார் என்னும் பெயரினர் என்பது இதிலுள்ள பாயிரப் பாடலால்1 அறியப்படுகின்றது. மாறன் பொறையனார் என்ற தொடர் மாறனுடைய மகனார் பொறையனார் என்று பொருள் படுவதாக உள்ளது. ஆகவே, மாறன் பொறையன் என்ற இரண்டு பெயர்களும் இயற்பெயர்களாதல் வேண்டும். இந் நிலையில், மாறன் என்பது பாண்டியனையும் பொறையன் என் பது சேரனையும் குறிக்குஞ் சிறப்புப் பெயர்களாகவும் காணப்படு கின்றன. எனவே, இவ்வாசிரியர் தென்பாண்டி நாட்டினரா யிருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடமுளது. இவரை 'வண் புள்ளி மாறன் பொறையன்' என்று பாயிரங் கூறுவது கொண்டு, இவர் அரசியலில் வரவு செலவு தொடர்புடைய ஓர் அதிகாரியா யிருந்தவர் என்று சிலர் கூறுகின்றனர். இவர் தம் நூலின் முதற் பாடலில், 2 மேகங்கள் கண்ணபிரானது நிறத்தைப்போல் 1. ( பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த ஐந்திணை யைம்பது மார்வத்தினோதாதார் செந்தமிழ் சேராதவர் ' (ஐந்திணை ஐம்பது, பாயிரப்பாடல்.) 2. மல்லர்க் கடந்தா னிறம்போன் றிருண்டெழுந்து செல்வக் கடம்பமர்ந்தான் வேன்மின்னி-- நல்லாய் இயங்கெயி லெய்தவன் சார்பூப்ப வீதோ மயங்கி வலனேருங் கார் ' (ஐந்திணை ஐம்பது, பா. 1.)