பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சே தமிழ் இலக்கிய வரலாறு இனி, " மாயவனுந் தம்முனும் போலே மறிகடலுங் - கானலுஞ்சேர் வெண்மணலுங் காணாயோ '1 என்னும் பாடற்பகுதியில் மறிகடலுக்கு மாயோனையும் வெண் மணலுக்கு முன்னோனாகிய பலராமனையும் இவர் உவமானங் களாக அமைத்திருப்பது, படித்தின் புறற்பாலதாகும். ஒருவன் இப்பிறப்பின் கண் செய்த தீவினை, இப்பிறப்பிலேயே அவனையடைந்து பயன் கொடுக்கும்போல் தெரிகிறது ; அறியா தவர்கள் அது மறுபிறப்பில்தான் பயனளிக்குமென்று கூறு வார்கள் என்னுங் கருத்தினை இவ்வாசிரியர், இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலும் உம்மையே யாமென்பா ரோரார்காண் '2 என்ற பாடற்பகுதியில் குறித்திருப்பது அறியத்தக்கது. சைவ சமயகுரவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்திகளும் 'செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும்திண்ணமே' என்று இக்கருத் தினைத் தம் அருட்பாடலொன்றில் வலியுறுத்தியுள்ளமை காண்க. இனி, உடன்போக்கினை மேற்கொண்ட தலைவனையும் தலை" வியையும் தேடிச்சென்ற செவிலித்தாய்க்கு அவர்களை எதிரே கண்ட ஒரு கணவனும் அவன் மனைவியும் அச்செய்தியை யுணர்த் துவதாகக் கணவன் கூற்றில் வைத்து இவ்வாசிரியர் இயற்றி யுள்ள அரிய பாடலொன்று, பண்டைத் தமிழ் மக்களின் உள் ளத் தூய்மையையும் ஒழுக்கத்தின் ஒப்புயர்வற்ற நிலையையும் நன்கு புலப்படுத்துவதாக உள்ளது. அது, " நண்ணிநீர் சென் மின் நமரவர் ஆபவேல் எண்ணிய எண்ணம் எளிதரோ- எண்ணிய வெஞ்சுட ரன்னானை யான்கண்டேன் கண்டாளாம் தண்சுட ரன்னாளைத் தான்' என்பதாம். 1. திணைமாலை நூற்றைம்பது, பா. 58. 2. ஷை பா, 123. 3. சுந்தரமூர்த்திகள் தேவாரம் - திருப்புறம்பயப்பதிகம், பா, 4+ 4. திணைமாலை நூற்றைம்பது, பா, 89.