பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



திணைமாலை நூற்றைம்பது 69 இப்பாடலில் ஆண்மகனது பிறன்மனை நோக்காத பேராண் மையும் பெண்மகளது பிற ஆடவரைக் கண்களாற் காணாத கற்புடைமையும் தெள்ளிதிற் குறிப்பிடப்பட்டிருத்தல் உணரற் பாலதாம். இக்கருத்தினைச் சைவசமய குரவருள் ஒருவராகிய மணிவாசகப் பெருமான், ' மீண்டா ரெனவுவந் தேன் கண்டு நும்மையிம் மேதகவே பூண்டா ரிருவர் முன் போயின ரேபுலியூ ரெனை நின் றாண்டா னருவரை யாளியன் னானைக்கண் டேனயலே தூண்டா விளக்கனை யாயென்னையோவன்னை சொல்லியதே '1 என்று தம் திருக்கோவையாரில், ஒரு பாடலில் கூறியிருத்தல் அறியற்பாலதாகும். இந்நூலின் இறுதியில் புறவுரையாக ஒரு வெண்பா உளது.2 அதனை நோக்குமிடத்து, இவ்வாசிரியர் காலத்தில் அகப்பொரு ளாகிய களவியலை வெறுத்துக்கொண்டிருந்த ஒரு குழுவினர் நம் தமிழ்நாட்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பதும் அவர்கட்கு அதன் சிறப்பினை விளக்கி அன்னோர் கொண்டிருந்த வெறுப் பினைப் போக்கவேண்டியே இவ்வினிய நூலை இவர் இயற்றி யிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு வெளியாகின்றன. இவர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவர் என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. திருக்கோவையார், பா. 244. 'முனிக் தார் முனிவொழியச் செய்யுட்கண் முத்துக் கனிந்தார் களவியற் கொள்கைக்-கணிந்தார் இணைமாலை யீடிலா வின் றமிழால் யாத்த திணைமாலை கைவரத் தேர்ந்து, (திணைமாலை நூற்றைம்பது, பாயிரம்)