உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



14. கைந்நிலை இஃது அறுபது வெண்பாக்களையுடைய ஒரு நூல் ; ஐந் திணைக்குரிய அகவொழுக்கத்திற்கு இலக்கியமாயமைந்தது. எனவே, ஒவ்வொரு திணையும் பன்னிரண்டு பாடல்களையுடைய தாகும். இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பல வெண்பாக்கள் சிதைந்தழிந்து போயின. இந் நூலின் ஆசிரியர் மாறோகத்து முள்ளி நாட்டு நல்லூர்க்காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பார். இவரது இயற்பெயர் புல் லங்காடனார் என்பது. இவரது ஊர் முள்ளி நாட்டு நல்லூராகும். அவ்வூர் மாறோகத்து முள்ளிநாட்டு நல்லூர் என்று கூறப்பட் டிருத்தலால், அது திருநெல்வேலி ஜில்லாவில் பாண்டியரின் பழைய தலைநகராகிய கொற்கையின் பக்கத்திலிருந்ததோர் ஊரா தல் வேண்டும். மாறோகம் கொற்கையைச் சூழ்ந்த நாடு என்பது உணரற்பாலதாகும். கைந்நிலையின் ஆசிரியராகிய இப் புல்லங் காடனார் தென்பாண்டி நாட்டில் கொற்கைக் கண்மையில் வாழ்ந்தவராதல் வேண்டுமென்பதை இந் நூலின் இறுதிப்பாடல் குறிப்பாக உணர்த்துதல் அறியத்தக்கது. இவருடைய தந்தை யார் காவிதியார் என்ற பட்டம் பெற்றவராயிருத்தலால் இவர் பாண்டியர்க்கு வழி வழி அமைச்சுரிமை பூண்டொழுகிய ஒரு தொல்பெருங் குடியில் தோன்றியவர் என்பது நன்கு தெளியப் படும். இவரைப்பற்றிய மற்றைச் செய்திகள் புலப்படவில்லை. இந்நூலில், பாசம், ஆசை, இரசம், கேசம், இடபம், உத்தரம் ஆகிய வட சொற்கள் பயின்றுவருதலை நோக்குமிடத்து, இது கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்த் தோன்றிய நூல் " என்பது நன்கு துணியப்படும். ஆகவே, இதன் ஆசிரியர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவராதல் வேண்டும். இதுகாறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் கடைச் சங்க காலத்திற்குப் பிறகு கி. பி. ஆறாம் நூற்றாண்டின் தொடச் 1. ( பொன்னம் பசலையுந் தீர்ந்தது பூங்கொடி தென்னவன் கொற்கைக் குருகிரிய-மன்னரை யோடு புறங்கண்ட வொண்டாரான் தேரிதோ கூட லணைய வாவு ' (கைந்நிலை, பா. 60.)