பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



80 தமிழ் இலக்கிய வரலாறு ணம். இவ்வுண்மையை, ' ஒப்பில் எழுகோடி யுகமிருந்தேனே'1 என்றும் ' இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி’2 என்றும் இவர் தம் திருமந்திரத்தில் கூறியுள்ளவற்றால் நன்கறியலாம். இனி, ' ஒன்றவன்றானே' என்று தொடங்குஞ் செய்யுள் தான் திருமந்திரத்தின் முதற்பாடல் என்பது சேக்கிழாரடிகள் கூற்றால் உணரப்படுகின்றது. ஆனால், அச்சிடப்பெற்று வெளி வந்துள்ள திருமந்திர நூலில் ' ஐந்து கரத்தனை யானை முகத்தனை' என்று தொடங்கும் விநாயகர் வணக்கம் முதற் செய்யுளாக உள்ளது. மூத்த பிள்ளையாராகிய யானை முகக் கடவுளின் வழி பாடு, கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இடையில் திருஞான சம்பந் தர் காலத்திலிருந்த சிறுத்தொண்ட நாயனாரால் நம் தமிழ்நாட் டில் முதலில் தொடங்கப்பெற்றுப் பிறகு தமிழகம் முழுவதும் பரவி, யாண்டும் நிலை பெற்றது என்பது ஆராய்ச்சியில் அறிந்த தோர் உண்மையாகும். எனவே, திருஞான சம்பந்தருக்குக் காலத்தால் முந்தியவரான திருமூல நாயனாரது திருமந்திரத்தில் முதலிலுள்ள யானைமுகக் கடவுளைப்பற்றிய பாடல் பிற்காலத் தில் ஒருவரால் எழுதிச் சேர்க்கப்பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாதல் காண்க. அங்ஙனமே பல பாடல்கள் இந்நூலில் இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்டிருக்கின் றமையால், இப்போ துள்ள திருமந்திரத்தில் மூவாயிரத்து நாற்பத்தேழு பாடல்கள் காணப்படுகின்றன. அன்றியும், சைவசிந்தாந்த மகாசமாசத்தார் வெளியிட்டுள்ள திருமந்திரத்தில் இன்னும் இருபத்து நான்கு பாடல்கள் ' அதிகப்பாடல்கள் ' என்ற தலைப்பில் நூலின் இறுதி யில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்நூலில் இப் போது 3071 பாடல்கள் உள்ளன என்பது உணரற்பாலது. இவற்றையெல்லாம் நோக்குமிடத்து, பிற்காலத்தில் தோன் றிய சைவசித்தாந்தப் புலவர்களுள் ஒருவராதல் சிலராதல் தம் கருத்துக்களைச் செய்யுட்களில் அமைத்து, அப்பாடல் --- 1. திருமந்திரம், பாயிரம், பா. 74. - 2. ஷை டிை பா. 80.