பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



திருமந்திரம் 81 களைத் திருமந்திர நூலில் இடையிடையே சேர்த்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிதிற் புலனாதல் காண்க. இந்நூலில் ஒரே பாடல் இருமுறை அல்லது மும்முறை வெவ்வேறு இடங்களில் வந்துள்ளமை குறிப்பிடத்தக்க தொன்றாம். அவ்வாறுள்ள அதிக பாடல்கள் ஐம்பத்திரண் டாகும். | இனி, இந்நூலிற் காணப்படும் ஒட்டியாணம்,1 கடுக்கன்,2 மல்லாக்கத்தள்ளல்,3 வட்டி,4 பொதுக்கென,5 சிதம்பரம்6 முதலான பிற்காலச் சொல்வழக்கு இதில் இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்ட சில பாடல்கள் உண்டு என்பதை உறுதிப் படுத்துதல் அறியத்தக்கது. இந்நூலாசிரியர் முதலில் ஆகமங்கள் ஒன்பது தோன்றின் என்றும், பின்னர் அவை விரிந்து இருபத்தெட்டு ஆகமங்களாகப் போயின என்றும் திருமந்திரப் பாடலொன்றில் கூறியிருப்பது உணரற்பாலதாகும். (பா. 1429) அன்றியும், இவ்வாசிரியர் தம் முடைய திருமந்திரம் ஓர் ஆகம நூல் என்றும் இது சிவபெருமான் திருவடித்துணை கொண்டு தம்மால் இயற்றப்பட்டதென்றும் * நந்தியிணையடி ' என்று தொடங்கும் எழுபத்து மூன்றஞ் செய்யுளில் குறித்துள்ளனர். ஆகவே இந்நூல் சைவசித்தாந்தக் கொள்கைகளையுணர்த்தும் பழைய தமிழாகம நூல் என்பதும், இதற்கு வடமொழியில் முதனூல் இல்லை என்பதும் அறியற் பாலவாம். இவர் பழைய சிவாகமங்கள் ஒன்பதையும் உளத்திற் கொண்டே, தம் திருமந்திர நூலை ஒன்பது தந்திரங்களாக வகுத் துள்ளனர் என்று கூறலாம். இவ்வொன்பது தந்திரங்களிலுமுள்ள சில அதிகாரங்கள் எல்லா மக்கட்கும் பொதுவாகவுள்ள யாக்கை நிலையாமை, புலால் மறுத்தல், அன்புடைமை, நடுவுநிலைமை, வாய்மை, அவாவறுத்தல், புறங்கூறாமை முதலான பொது அறங்களை எடுத்துரைக்கின்றன : பிற அதிகாரங்கள் எல்லாம் சைவசித்தாந்த உண்மைகளைக் கூறுகின்றன. ஆனால் இந் 1. பா. 818. 2. பா. 1424. 3. பா. 199. 4. பா. 250. 5. பா. 2950. 6. பாக்கள் 1726, 2553, 2722. II-6