பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



82 தமிழ் இலக்கிய வரலாறு நூலிலுள்ள பல பாடல்கள் பொருள்விளங்காத நிலையில்தான் உள்ளன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சைவ நூல் பரிசோதகரா - யிருந்து காலஞ்சென்ற சேற்றூர்ச் சுப்பிரமணியக் கவிராயர் இந் நூலில் நூறு பாடல்களுக்குச் சிறந்த பேருரை வரைந்து மதுரைத் தமிழ்ச்சங்கப் பதிப்பாக அதனை வெளியிட்டுள்ளமை பாராட்டத் தக்கதாகும். இனி,

  • நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'

(பா. 85) என்றும், * ஆர்க்கும் இடுமின் அவரிவ ரென்னன்மின்' (பா. 250) என்றும், ' ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் ' (பா. 2104) என்றும், * உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்" (பா. 1823) என்றும், * அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம் ' (பா. 2944) என்றும் இவ்வாசிரியர் கூறியுள்ள அரிய உண்மைகள் எல்லாச் சமயத் தினரும், எத்தகைய வேறுபாடுமின்றி எஞ்ஞான்றும் நினைவிற் கொண்டு ஒழுகத்தக்க பொதுவான அறவுரைகளாகும். சைவ சமய குரவராகிய சுந்தரமூர்த்திகள், திருமூல நாயனாரைச் சிவனடியார் அறுபத்து - மூவருள் ஒருவராக வைத்துத் தம் திருத்தொண்டத் தொகையில் வணக்கம் கூறியுள்ளனர். நம்பியாண்டார் நம்பிகள் தம் திருத்தொண் டர் திருவந்தாதியில் 2 இவர் வரலாற்றை ஒரு பாடலில் சுருக்கமாக உ.ரைத்துள்ளனர். சேக்கிழாரடிகள் தம் திருத்தொண்டர் 1. திருத்தொண்டத் தொகை, பா. 5. 2. திருத்தொண்டர் திருவந்தாதி, பா. 36