பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



83 திருமந்திரம் புராணத்தில் அவ் வரலாற்றை இருபத்தெட்டு இனிய பாடல் களில் விரித்துப் பாடியுள்ளனர். ஆகவே, இவர்கள் எல்லோர்க்கும் காலத்தால் முந்தியவர் திருமூலர் என்பது தேற்றம். திருஞான சம்பந்தர் திருவாவடுதுறைத் திருக்கோயிலுக்குச் சென்றபோது பலிபீடத்திற்கண்மையில் நிலத்தைத் தோண்டுவித்து அவ்விடத் திலிருந்து திருமந்திர நூலை எடுத்தனர் என்னும் வரலாற்றை நோக்குங்கால், திருமூலர் கி. பி. ஏழாம் நூற்றாண்டினிடையில் நிலவிய திருஞானசம்பந்தருடைய காலத்திற்கும் முற்பட்டவர் என்பது தெள்ளிது. இவர் சிதம்பரத்தையும் அதிலுள்ள பொன்னம்பலத்தையும் திருமந்திரத்தில் சில பாடல்களில் 2 கூறி யுள்ளமையால் தில்லை மாநகரில் அவ்வம்பலம் அமைக்கப்பெற்ற பின்னரே இந் நூலை இயற்றியிருத்தல் வேண்டும் என்பது ஒரு தலை. தில்லையம்பதியில் கூத்தப்பெருமானுக்கு அம்பலம் அமைத்து அதற்குப் பொன் வேய்ந்தவன் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டி லிருந்த பல்லவ வேந்தனாகிய சிம்மவர்மன் ஆவன். எனவே, தில்லைப் பொன்னம்பலத்தைத் தம் நூலில் கூறியுள்ள திருமூல நாயனார் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலா தல் ஆறாம் நூற்றாண்டிலாதல் இந்நூலை இயற்றியிருத்தல் வேண்டும் என்பது -நன்கு துணியப்படும். இனி, இவரது நூலிலுள்ள 204-ஆம் பாடல் யாப்பருங்கல் விருத்தியில் அவ்வுரையாசிரியரால் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளது. சித்தாந்தம் என்னும் வடசொற்றொடரைத் தமிழ் நூலில் முதலில் எடுத்து வழங்கியவர் திருமூலரே என்பது உணரற்பாலதொன்றாம். பிற்காலத்தில் இச்சொற்றொடர் சமய நூல்களில் மிகுதியாகப் பயின்றுவருதலைக் கற்றோர் பலரும் அறிவர். ஆனால், திருமூலர் காலத்திற்குப் பின்னர் விளங்கிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள், திருவாதவூரடிகள் ஆகிய சமய குரவர் நால்வரும் இச் சொற் றொடரைத் தம் திருப்பதிகங்களில் எடுத்தாளாமை குறிப்பிடத் தக்கதாகும். எனினும், ' கடல் சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்குமடியேன் ' 1. பெரிய புராணம், திருமூல நாரனார் புராணங், 1-28 2. திருமக், பாக்கள், 2653, 2722, 2740, 2777.