பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



84 தமிழ் இலக்கிய வரலாறு என்று சுந்தரமூர்த்திகளால் திருத்தொண்டத் தொகையில் பாராட்டப்பெற்ற இரண்டாம் நரசிங்கவர்மன் என்ற பல்லவ மன்னன் தான் காஞ்சியில் எடுப்பித்த கைலாசநாதர் கோயிலில் பொறித்துள்ள வடமொழிக் கல்வெட்டொன்றில் தன்னைச் சைவ சித்தாந்த நெறியைப் பின்பற்றுபவன் என்று கூறி யிருப்பது அறியத்தக்கது. ஆகவே, சமய குரவர் காலங்களில் சித்தாந்தம் என்ற தொடர் வடமொழி நூல்களில் பயின்று வந்ததுபோலும். பழைய தமிழ் நூல்களுள் திருமந்திரத்தைத் தவிர வேறு நூல்களில் இத் தொடர் காணப்படாமை குறிப் பிடத்தக்கதாகும். 1. South Indian Inscriptions, Vol. I, No. 24 Verse 5.