பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



முத்தொள்ளாயிரம் 87 என்பது முதலாகவுள்ள எட்டுச் செய்யுட்களின் இறுதியில் அமைத்துள்ளனர். எனவே, முத்தொள்ளாயிர வாசிரியர் பெரி யாழ்வாரின் காலமாகிய கி. பி. எட்டாம் நூற்றாண்டிற்கும் முந்தியவர் என்பது தேற்றம். < செய்யா ரெனினுந் தமர்செய்வ ரென்னுஞ்சொல் மெய்யா தல் கண்டேன் விளங்கிழாய்-கையார் வரிவளை நின்றன வையையார் கோமான் புரிவளை நின் றியம்பக் கேட்டு' என்னும் முத்தொள்ளாயிரக் கைக்கிளைச் செய்யுளில் - செய்யா ரெனினுந் தமர் செய்வர் ' என்ற பழமொழித் தொடர் காணப் படுகின்றது. அன்றியும், ' மன்னுயிர்காவல் ' என்று தொடங் கும் கைக்கிளைப்பாட்டில் பழமொழியிலுள்ள தொடர் ஒன்றை ' நீரொழுகப் பாலொழுகா வாறு ' என்று சிறிது மாற்றி அமைத் துள்ளனர். ஆகவே, இந்நூலாசிரியர் பழமொழியின் ஆசிரிய ராகிய முன்றுறை யரையர்க்குப் பின்னர் இருந்திருத்தல் வேண் டும் என்று தெரிகிறது. இதுகாறும் ஆராய்ந்தவற்றால் பழமொழி யாசிரியரின் காலமாகிய கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்ன ரும் பெரியாழ்வார் நிலவிய கி. பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னரும் இவ்வாசிரியர் இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாதல் காணலாம். பிற்காலத்தில் தமிழ் வேந்தர் களின் குதிரைகளுக்கு வழங்கிய கனவட்டம், பாடலம் ஆகிய பெயர்களை இவர் தம் நூலில் கூறியிருத்தலாலும், நாமம், பூமி, பரிசயம், ஓசை, திலகம், வீதி, சேலேகம், சாலேகம், சேனை, உதிரம், விசயன், உபாயம், ஆகம், நேமி, சமம் முதலான வட சொற்களை எடுத்தாண்டிருத்தலாலும் தமிழகத்தில் வடமொழி பரவிப் பெருமை யெய்தியிருந்த கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இவர் இருந்திருத்தல் வேண்டும் என்று கொள்வது எவ்வாற்றானும் பொருந்தும் எனலாம். இவர் சேர சோழ பாண்டியருள் எவ்வேந்தனையும் பேர் குறித்துத் தனியே புகழ்ந்து பாடாமல் அம்மூவேந்தரையும்