பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



88 தமிழ் இலக்கிய வரலாறு அன்னோர்க்குரிய பொதுப்பெயர்களால் சிறப்பித்துப் பாடி யுள்ளமையொன்றே, இவர் பரிசில் முதலான பயன் கருதி இந் நூலை இயற்றவில்லை என்பதை நன்கு புலப்படுத்துவதாகும். எனவே, முடியுடைத் தமிழ் வேந்தர் மூவருடைய அறிவு திருவாற் றல்களையும் வீரம் கொடை முதலானவற்றையும் எல்லோர்க்கும் உணர்த்தும் பொருட்டு ஆசிரியர் இந்நூலை இயற்றியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. -- இந்நூலாசிரியருடைய பெயரும் வரலாறும் தெரியவில்லை. பெரியாழ்வாரும் நம்மாழ்வாரும் இவர் நூலைப் பயின்றிருத்தலை நோக்குங்கால், இவர் பாண்டி நாட்டிலிருந்த புலவராயிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.

  • மன்னிய நாண்மீன்' என்று தொடங்கும் கடவுள் வாழ்த்துப் பாடலாலும், புகழ் என்ற பகுதியிற் காணப்படும் ' மடங்கா மயிலூர்தி ' எனவும், ' செங்கண் நெடியான் மேல் ' எனவும் தொடங்கும் வெண்பாக்களாலும் இந்நூலாசிரியர் சைவ சமயத்தினராயிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணி யப்படும்.

' விருந்தே தானும் -புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'2 என்னுந் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திரத்தின் உரையில் * புதுவ துகிளந்த யாப்பின் மேற்றென்ற தென்னை யெனின், புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந்தொடர்ந்து வரச்செய்வது ; அது முத்தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினார் செய்த அந்தாதிச் செய்யுளும் எனவுணர்க' என்று பேராசிரியர் கூறியிருத்தலால், முத்தொள்ளாயிரம் எனப்படுவது ஆசிரியர் தாம் வேண்டியவாற்றால் புதிதாக இயற்றிய தொடர்நிலைச் செய்யுள் என்பது தெளிவாகப் 1. ' மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப்- பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால் -- ஊர்திரைநீர் வேலி யுலகு ' (முத்தொள். கடவுள் வாழ்த்து) 2. * தொல். பொருள். செய்யுளியல், சூ. 239