பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



86 தமிழ் இலக்கிய வரலாறு

  • செங்கண் நெடியான் மேல் தேர்வீசய னேற்றியபூப் பைங்கண்வெள் ளேற்றான்பால் கண்டற்றால் - எங்கு முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன் அடிமிசையே காணப் படும்

என்னும் முத்தொள்ளாயிரப் பாடலுக்கு மறுப்புரையாகத் திரு மாலடியாருள் ஒருவராகிய நம்மாழ்வார் தம் திருவாய் மொழியில்

  • தீர்த்தன் உலகளந்த சேவடிமேற் பூந்தாமம் சேர்த்தி யதுவே சிவன் முடிமேற் றான் கண்டு பார்த்தன் றெளிந்தெழுந்த பைந்துழா யான்பெருமை பேர்த்தும் ஒருவராற் பேசக் கிடந்ததே'

என்ற பாடலொன்றைக் கூறியுள்ளனர். எனவே, கி. பி. ஒன்ப தாம் நூற்றாண்டினிடையிலிருந்த நம்மாழ்வார்க்கு முத்தொள் ளாயிர வாசிரியர் காலத்தால் முற்பட்டவர் ஆவர். " நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத் தாமரையு நீலமுந் தைவந்- தியாமத்து வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய் பண்டன்று பட்டினங் காப்பு என்ற முத்தொள்ளாயிரப் பாடலிலுள்ள ( பண்டன்று பட்டி னங் காப்பு' என்னுந் தொடரைப் பெரியாழ்வார் தம் திரு மொழியில் ' நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்தெங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப்போமின் மெய்க்கொண்டு வந்துபுகுந்து வேதப் பிரானார் கிடந்தார் பைக்கொண்ட பாம்பணையோடும் பண்டன்று பட்டினங்காப்பே'