உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 தமிழ் இலக்கிய வரலாறு தோன்றும்படி செய்யவில்லை என்றும் ஐயமின்றிக் கூறலாம். தமி முகத்திற்குப் புதியவர்களாகவும் வேறு மொழி பேசுவோ ராகவும் இருந்த பல்லவர்கள் தமிழ்மொழியின் சிறப்பினை எங்ஙனம் உணரக்கூடும்? ஆதலால், தமிழகத்தின் வட பகுதியில் முற்கால இடைக்காலப் பல்லவர்களின் ஆட்சியில் தமிழ் மொழியில் சிறந்த நூல்கள் தோன்றுவதற்கு இட மில்லாமற் போயினமை காண்க. இனி, அக்காலத்தில் தமிழகத்தின் தென்பகுதி எத்தகைய நிலையில் இருந்தது என்பது ஆராய்தற்குரியது. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த களப்பிரர் படையெழுச் சியினால் பாண்டி நாடு அன்னோர் ஆட்சிக்குட்பட்டதோடு அந் நாட்டின் தலைநகராகிய மதுரையம்பதியில் நெடுங்காலமாகப் புகழுடன் நடைபெற்றுவந்த தமிழ்ச்சங்கம் அழிந்துபோயினமை யும் முன்னர் விளக்கப்பட்டுள்ளது. ஆகவே, அக்காலப்பகுதி யில் பாண்டி நாட்டிலும் தமிழ்மொழி ஆதரிப்பாரற்றுத் தன் பெருமையிழந்து வீழ்ச்சியடைந்தமை தெள்ளிது. பௌத்த சமயத்தினரான களப்பிரர்கள், பிறகுசோழநாட்டையும் கைப் பற்றி ஆட்சிபுரிவாராயினர். அந்நாட்களில் அவர்கள் தாம் மேற் கொண்டிருந்த பௌத்தசமயத்தைத் தமிழகத்தின் தென்பகுதி யில் யாண்டும் பரப்புவதற்குப் பெரிதும் முயன்றனர். ஆகவே, அக்களப்பிரரது ஆட்சியில் பௌத்த சமய நூல்கள் நம் தமிழ் நாட்டில் தோன்றுவவாயின. அந்நூல்களும் தமிழ் மொழியில் எழுதப்படாமல் பாலிமொழியில் எழுதப்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும். கி. பி. நான்காம் நூற்றாண்டில் சோழர்களின் பழைய தலைநகராகிய உறையூரில் பிறந்து வளர்ந்த புத்த தத் தன் என்பவன் இருமுறை ஈழநாட்டிற்குச் சென்று, பௌத்த சமய நூல்களை நன்கு பயின்று, பிறகு சோழநாட்டிற்குத் திரும்பிவந்து, அபிதம்மாவதாரம், விநயவிநிச்சயம் என்று இரு நூல்களையும் பாலிமொழியில் எழுதி வெளியிட்டுள்ள