உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19 பிறமொழிகளும் புறச்சமயங்களும் திரண்டாம் ஆண்டாகிய கி. பி. 458-ல், திருப்பாதிரிப்புலியூர் என்று இக்காலத்தில் வழங்கிவரும் பாடலிபுத்திரத்திலிருந்த ஓர் அமண்பள்ளியில் - லோகவிபாகம்' என்ற திகம்பர சைன நூல் படி எடுக்கப்பெற்றது என்னும் செய்தி அந்நூலில் காணப்படு கின்றது.1 எனவே, அந்நூலின் ஆசிரியர் அவ்வாண்டிற்கு முன் னரே தம் நூலை எழுதி முடித்திருத்தல் வேண்டும் என்பது திண் ணம். கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் பிராகிருதத்திலும் வட மொழியிலும் பெரும்புலமை எய்தியிருந்த சிம்மசூரி ரீஷி, சர்வ நந்தி என்ற இரண்டு அறிஞர்கள் அவ்வமண்பள்ளியில் தங்கி அவ்விரு மொழிகளையும் பலர்க்கும் கற்பித்து வளர்த்துவந்தமை அறியத்தக்கது.2 கி. பி. ஆறாம் நூற்றாண்டில் காஞ்சியிலிருந்து ஆட்சிபுரிந்துகொண்டிருந்த சிம்ம விஷ்ணு என்ற பல்லவ அரச னுடைய அவைக்களப் புலவராக விளங்கியவர் பாரவி என்னும் வடமொழிப் புலவர் ஆவர்.3 அம்மன்னனால் நன்கு ஆதரிக்கப் பெற்று நல்வாழ்வு பெற்றிருந்த இப்புலவர் தலைவர் வடமொழி யில் கிராதார்ச்சுனீயம் முதலான நூல்கள் இயற்றித் தம் புகழை யாண்டும் பரப்பியிருத்தல் உணரற்பாலதாம். இச் செய்திக ளெல்லாம், கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில் தமிழகத் தின் வடபகுதியைக் கைப்பற்றிக் காஞ்சிமாநகரைத் தலைநகரா கக்கொண்டு அரசாண்டுவந்த பல்லவ அரசர்கள் கி. பி. ஏழாம் நூற்றாண்டு வரையில் வடமொழிப் பயிற்சி எங்கும் பரவும்படி செய்து வந்தமையோடு4 அம்மொழியில் வல்லுநரைப் போற்றிப் புரந்தும் வந்தனர் என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துதல் காண்க. எனவே, அவ்வேந்தர்கள் பொதுமக்களின் தாய்மொழி யாகிய தமிழ் மொழியின் வளர்ச்சியில் சிறிதும் ஈடுபடவில்லை என்றும் தமிழ்ப் புலவர்களை ஆதரித்துச் சிறந்த தமிழ் நூல்கள்

  • 1. Administration and Social Life under the Pallavas, pp.

227-230. 2. Ibid: p. 229. 3. The Pallavas by Mr. R. Gopalan M.A., p. 158, 4. Ibid, p. 157.