உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 தமிழ் இலக்கிய வரலாறு கலைக்கூடத்தின் ஆண்டுச் செலவிற்காக அந்நாட்டில் மூன்றூர் கள் இறையிலியாக வழங்கப்பட்டுள்ளன என்பதும் பாகூர்ச் செப்பேடுகளால் தெள்ளிதிற் புலப்படுகின்றன.1 பல நூற் றாண்டுகள் தமிழ்ச் சங்கம் நிலைபெற்றிருந்ததும் பாண்டி வேந்தர் களின் தலைநகராக விளங்கிய துமாகிய மதுரையம்பதியைச் சிறி தும் அறிந்துகொள்ளாத வடநாட்டு மக்கள், காஞ்சிமா நகரை மாத்திரம் நன்கு அறிந்துள்ளமைக்கும் அதனைப் பரதகண்டத்தி லுள்ள ஏழு புண்ணிய நகரங்களுள் 2 ஒன்றாக ஏற்றுக்கொண்டு பாராட்டியுள்ளமைக்கும் காரணம், அந்நகரில் பல்லவ அரசர் கள் அமைத்திருந்த வடமொழிக் கல்லூரியின் பெருமையும் சிறப்பும் அக்காலத்தில் வடபுலம் முழுவதும் பரவியிருந்தமையே யாகும்.3 வடமொழிப் புலவராகிய காளிதாசர் என்பார் நகரங் களுள் சிறந்தது காஞ்சி என்று கூறியிருப்பதும் முற்காலத்தில் அந்நகரில் நடைபெற்றுவந்த வடமொழிக் கல்லூரியின் சிறப்புப் பற்றியேயாம் என்பது ஈண்டுணரற்பாலது. வைதிகர், சைவர், வைணவர், சமணர், பௌத்தர் ஆகிய பல்வகைச் சமயத்தினரும் காஞ்சிமா நகரிலிருந்த வடமொழிக் கல்லூரியில் தத்தம் சமய நூல்களையும் அளவை நூல்களையும் பிற வட மொழி நூல்களை யும் நன்கு பயின்று சமயவாதம் புரிவதில் பேராற்றலுடையவர் களாய் விளங்கிவந்தமையால் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முற் பகுதியில் நிலவிய சைவ சமயகுரவராகிய திருநாவுக்கரசு அடிகள் ( கல்வியிற் கரையிலாத காஞ்சிமாநகர் '4 என்று தம் கச்சித் திருமேற்றளிப் பதிகத்தில் குறிப்பிடுவாராயினர். இரண்டாம் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சியிலிருந்து அரசாண்டுகொண்டிருந்த காலத்தில் அவனது ஆட்சியின் இருபத் 1. Epigraphia Indica, Vol. XVIII, No, 2. 2. பாதகண்டத்தில் புண்ணிய நகரங்களாகக் கருதப்பட்ட எழனுள் காஞ்சி யைத் தவிர மற்ற ஆறும் வடகாட்டூர்கள் என்பது உணரற்பாலது. !3 Dr. Krishnaswami Aiyangar Commemoration Volume, pp. 306' and 3074. திருக்கச்சி மேற்றளிப்பதிகம், பா. 8.