________________
பிறமொழிகளும் புறச்சமயங்களும் என்று ஐயமின்றிக் கூறலாம். கடம்பர்குல முதல்வனும் வேதங்களை நன்கு பயின்றவனும் கி. பி. 345 முதல் கி. பி. 370 வரையில் இருந்தவனுமாகிய மயூரசர்மன் என்பான், காஞ்சியி லிருந்த வடமொழிக் கல்லூரியில் படிக்கும் பொருட்டுத் தன் ஆசிரியராகிய வீரசர்மரோடு சென்றான் என்று தாளகுண்டாவி லுள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது. பௌத்தர்களால் அமைக்கப்பெற்ற நாலந்தாப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக விளங்கிய தர்மபாலர் என்பவர் காஞ்சியிலிருந்த திக் நாகருடைய மாணவர் ஆவர். இவர், காஞ்சியிலிருந்த வடமொழிக் கல்லூரி யில் முதலில் கல்வி பயின்று, பிறகு அப்பல்கலைக்கழகத்திற்குச் சென்று, சில ஆண்டுகள் வரையில் அங்குப் படித்து, பின்னர் அக் கழகத்திற்கே தலைவராயினர் என்பது உணரற்பால தொன்றாம்.2 தொண்டை மண்டலத்தில் சோழ சிங்கபுரத் திற்கு அண்மையிலுள்ள கடிகாசலம், புதுச்சேரியைச் சார்ந்த வாகூர் ஆகிய ஊர்களில் வட மொழிக்கல்லூரிகள் இருந்தன என்பது நந்திவர்மப் பல்லவமல்லனது திருவல்லத்துக் கல் வெட்டினாலும் நிருபதுங்கவர்மனுடைய பாகூர்ச் செப்பேடுக ளாலும் நன்கறியப்படுகின்றது. அக்கல்லூரிகள், வடமொழி வளர்ச்சி கருதி நான்கு ஐந்தாம் நூற்றண்டுகளிலேயே இடைக் காலப் பல்லவ மன்னர்களால் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அவற்றில் வடமொழியிலுள்ள பல கலை களும் சிறந்த ஆசிரியர்களால் மாணவர்கட்குக் கற்பிக்கப்பட்டு வந்தமையோடு அன்னோர்க்கு உணவும் உடையும் உறையுளும் பிறவும் இலவசமாகக் கொடுக்கப்பெற்றுவந்தமையுங் குறிப் பிடத்தக்கதாகும். வாகூர்க் கல்லூரியில் வடமொழியிலுள்ள பதினான்கு வித்தைகள் கற்பிக்கப்பட்டு வந்தன என்பதும் அக் 1. Epigraphia Indica, Vol. VIII, pp. 24-36. Epigraphia Carnatica, Vol. VII. p. 200. Indian Antiquary, Vol. XXV, p. 27. 2. Administration and Social Life under the Pallavas, p. 225 3. Ibid, pp. 197-199. II-2