பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- தமிழ் இலக்கிய வரலாறு - எனலாம். எனவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரையில் நடை பெற்ற அயலார் ஆட்சியில் தமிழ் மொழி போற்றுவாரற்றுத் தன் வளர்ச்சியும் பெருமையும் இழந்து தாழ்ந்த நிலையை எய்தியிருந் தமை உணரற்பாலதாகும். அயலார் ஆட்சியில் பிறமொழிகளும் புறச்சமயங்களும் பெருமை யெய்தி வளர்ச்சியுற்றமை : கி. பி. மூன்றாம் நூற் றாண்டின் இடைப்பகுதியில் தமிழகத்தின் வடபகுதிகளாகிய தொண்டை நாட்டையும் நடுநாட்டையும் பல்லவர்கள் கைப் பற்றி அரசாண்டுவந்தமை முன்னர் விளக்கப்பட்டது. அவர் களுடைய செப்பேடுகள் முதற்காலப் பகுதியில் பிராகிருத மொழியிலும், இடைக்காலப்பகுதியில் வடமொழியிலும், கி. பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கும் பிற்காலப்பகுதியில் வட மொழி தமிழ் ஆகிய இருமொழிகளிலும் வரையப்பெற்றுள்ளன. ஆகவே, முதற்கால இடைக்காலப் பகுதிகளில் அவ்வேந்தர்கள் பிராகிருதத்தையே தம் அரசாங்க மொழியாகக் கொண்டு வட மொழியைப் பெரிதும் ஆதரித்து அம் மொழிவளர்ச்சியில் தம் கருத்தைச் செலுத்திவந்தனர் எனலாம். அன்னோர் தம் தலைநக ராகிய காஞ்சியில் வடமொழியிலுள்ள கலை நூல்களையும் பல் வகைப்பட்ட சமய நூல்களையும் வடபுலமக்களும் வந்து கற்கு மாறு ஒரு பெருங்கல்லூரி நிறுவி அதனை நன்கு புரந்துவந்தமை அறியத்தக்கது. காஞ்சிமாநகரில் அரசாங்க ஆதரவில் நிலைபெற் றிருந்த அவ் வடமொழிக் கல்லூரி அந்நாட்களில் ஒரு பெரிய பல்கலைக்கழகம்போல் விளங்கிக்கொண்டிருந்தது. அங்கு மாணவர்கள் எல்லோரும் உண்டியும் உறையுளும் இலவச மாகப் பெற்று எத்தகைய கவலையுமின்றி வடமொழியில், தாம் விரும்பிய கலை நூல்களைப் பயின்றுவந்தனர். அது கல்லூரியின் பெருமை வடநாடு முழுமையும் பரவியிருந்தது 1. Epigraphia Indica, Vol. I, No.1. Ibid, Vol. VI, No=S; Ibid, Vol. VIII, No. 12.