________________
25 தமிழ் இலக்கிய வரலாறு அதனையுணர்ந்த வேறு அறிஞர் சிலரும் அவ்வரிய கலைப் பின் பற்றி மற்றுஞ் சில நீதிநூல்களை அக்காலத்தில் இயற்றியுள்ளனர். அவைகள் எல்லாம் தமிழ்மக்கள் தம் பண்டை அறவொழுக்கங் களைப் பொன்னேபோற் போற்றி அவற்றின் வழியே நல்வாழ்க்கை நடத்தி இன்புறுவதற்குப் பெரிதும் பயன்பட்டுவந்தன வெனின், அச்செய்தி வெறும் புனைந்துரையன்று. கடைச்சங்ககாலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்ட அன்னியர் ஆட்சியில் பௌத்தரும் சமணரும் அரசாங்க ஆதரவு பெற்றுப் பெருஞ் செல்வாக்கு எய்தியிருந்தமை முன்னர் விளக் கப்பட்டது. அந்நாட்களில் தமிழ் மக்களுட் சிலர் பௌத்த சமண சமயங்களில் பெரிதும் ஈடுபட்டு அவற்றைச் சார்த்தொழு கக் தலைப்பட்டமையோடு தம் ஒழுக்க வழக்கங்களையும் கைவிடத் தொடங்கினர். அந்நிகழ்சிகள் நன்குணர்ந்த சைவ வைணவப் புலவருட் சிலர், தமிழர்களுடைய வழக்க வொழுக் கங்களும் நாகரிகமும் இழுக்குருவண்ணம் சிறு நிதிநூல்கள் இயற்றி மக்களிடையே பரப்புவாராயினர். சங்ககாலத் தமிழ் மக்கள், கலப்பற்ற தூய தமிழில் பேசியும் எழுதியும் வந்தமை யோடு சிறந்த தமிழறிவு வாய்க்கப்பெற்று மிருந்தனர். எனவே, அவர்கள் உயர்ந்த நீதி நூலாகிய திருக்குறளப் படித்து உண் மைப்பொருளை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களா கத் திகழ்ந்தனர். ஆனால், கடைச்சங்க காலத்திற்குப்பிற்பட்ட இருண்டகாலத் தமிழ் மக்கள் சிறந்த தமிழறிவு பெறுவதற்கு வாய்ப்பில்லாமற்போயினமையின் அத்தகைய ஆற்றல் இல்லா தவராயிருந்தனர். அதுபற்றியே அக்காலத்தில் நிலவிய அறிஞர் கள் அன்னோர்க்கு ஏற்றவாறு எளிய வெண்பாக்களில் சிறு சிறு நீதி நூல்கள் இயற்றியுள்ளனர் என்பது அறியற்பாலதாம். அவ் வாறு தோன்றிய நூல்கள் இனியவை நாற்பது, இன்னாகாற்பது, திரிகடுகம், நான்மணிக்கடிகை என்பனவாம். அந் நூல்களை அவ்விருண்டகாலத் தமிழ்மக்கள் படித்துத் தம் வழக்க வொழுக்கங்கள் குன்றாதவாறு நடந்துவந்தனர் என்பதற்குச்