________________
தமிழ் இலக்கிய வரலாறு அகச்சான்றுகளையும் பிற சான்றுகளையும் துணையாகக் கொண்டு இலக்கிய வரலாற்றை ஆராய்ந்து துணிதல் ஏற்புடையதேயாம். கி. பி. 250 முதல் கி. பி. 600 வரையில் அடங்கிய காலப் பகுதியில் இயற்றப்பெற்றனவாக ஆராய்ந்தறியப்பெற்ற தமிழ் நூல்கள் முன்னர்க் கூறப்பட்டன. அவற்றுட் சில, சமய நூல் களாகவும், ஒன்று சேர சோழ பாண்டியரின் பண்டைப் பெருமை களைக் கூறும் நூலாகவும் ஏனைய வெல்லாம் நீதி நூல்களாகவும் இருத்தல் உணரற்பாலதாம். அந்நூல்களெல்லாம் எவ்வெவ்வாண் டில் எழுதப்பெற்றன என்பதை அறிந்து கோடற்கு ஆதா ரங்கள் கிடைக்கவில்லை. அன்றியும், அவை எந்த எந்த நூற்றாண்டில் தோன்றியிருத்தல் கூடும் என்பது கூட உய்த் துணர்ந்து கூறவேண்டிய நிலையில்தான் உளது. ஆகவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதிக்கும் கி. பி. ஆறாம் நூற் றாண்டின் கடைப்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன் றிய தமிழ் இலக்கியங்களில் முதலில் நீதி நூல்களை ஆராய்வோம்.