பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இருண்டகாலத்திலும் சில தமிழ் நூல்கள் 27 நன்கு துணியப்படும். அந்நூல்கள் இந்நாளில் கிடைக்காமற் போயினமையின் அவை இறந்தனபோலும். சிந்தாமணியின் ஆசிரியராகிய திருத்தக்க தேவரால் இயற்றப்பெற்ற நரிவிருத் தம் என்னும் நூல் திருநாவுக்கரசு அடிகளால் கூறப்பெற்ற நரிவிருத்தத்தினும் வேறானதொன்று என்பது ஈண்டுணரற் பாலதாகும். அக்காலப்பகுதில் எழுதப்பட்ட நூல்களுள், புலவர் பெரு மக்கள் எல்லோருடைய உள்ளத்தையும் பிணிக்கும் தன்மை வாய்ந்தது முத்தொள்ளாயிரம் என்ற அரிய நூலேயாம். அது, தமிழ் மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர்களின் பெருமை களை எடுத்துக்கூறும் ஒரு பெரு நூலாகும். அந்நூல் முழுவதும் இக்காலத்திற் கிடைத்திலது. எனினும், பண்டை உரையாசிரி யர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பெற்ற சில பாடல்களே இந்நாளில் தேடித் தொகுக்கப்பெற்று முத்தொள்ளாயிரம் என்ற பெயருடன் வெளியிடப்பட்டிருப்பது அறியத்தக்கது. இந் நூலைப்பற்றிய பிற செய்திகள் பின்னர்க் கூறப்படும். இனி, இருண்டகாலப் பகுதியில் இயற்றப்பெற்றனவாக இதுகாறும் ஆராய்ந்து காணப்பட்ட இலக்கியங்களின் வர லாறுகளைத் துருவி நோக்கி உண்மைச் செய்திகளையுணர்ந்து கொள்வது இன்றியமையாததாகும். இலக்கிய வரலாற்றில் விளக்கப்பட வேண்டியவை, நூல் வரலாறு, நூலாசிரியர் வர லாறு, நூல் இயற்றப்பெற்ற காலம், நூலால் நுவலப்படும் பொருள் என்பனவாம். இவற்றை உணர்த்தும் பொருட்டு நூல் தோன்றிய காலத்திலேயே இயற்றப்பெற்றுள்ள சிறப்புப் - பாயிரப் பாடல்கள் இவற்றுள் சிலவற்றை மாத்திரம் எடுத்துக் கூறுகின்றன. எனவே, அவை இலக்கிய வரலாற்றிற்குரியன வாக ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற எல்லாவற்றையும் உணர்த்து வனவாயில்லை. ஆயினும், ஓரளவு பயன்படும் நிலையிலுள்ள சிறப்புப்பாயிரப் பாடல்களையும் நூலகத்துக் காணப்படும் சில