பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் இலக்கிய வரலாறு களும் ஒழுக்கங்களும் கூறப்பட்டிருத்தலைக் கற்றோர் யாவரும் காணலாம். அந்நூற்றாண்டுகளில் சைவரும்வைணவரும்சமணரும் தம்தம் சமயத்தொண்டுகளைத் தமிழ்மொழிவாயிலாகச் செய்ய நேர்ந்தமை யால் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட இருண்டகாலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றுவவாயின. ஆனால், அந்நூல்கள் எல்லாம் இக்காலத்தில் நமக்குக் கிடைக்கவில்லை ; அவற்றுள் சிற்சில நூல்களே இப்போது நம் கைக்கு எட்டி யுள்ளன. அவை யெல்லாம் சமயச் சார்புபற்றி எழுந்தனவாயி னும் அவற்றின் ஆசிரியர்கள் தமிழ் மொழிக்குத் தொண்டுபுரிந்த நல்லறிஞரேயாவர். சமயத் தொண்டர்களாகிய அப்பெரியோர் கள் பல்வகைப்பட்ட தமிழ் நூல்களை அந்நாளில் இயற்றியிருத் தல்கூடும். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எத்துணையோ இடையூறுகட்கும் ஆட்சி மாறுதல்கட்கும் நடுவில் அவை நமக் குக் கிடைக்காமற் போயினமை இயல்பாக நிகழக்கூடியதேயன்றி வியப்பிற்குரியதன்று. ஆயினும், பண்டைத் தமிழ் நூல்களுக்கு உரைகண்ட பேராசிரியன்மார், தம் தம் உரைகளில் மேற் கோளாக எடுத்துக்காட்டியுள்ள நூல்களுள் சிலவும் புறத்திரட் டிற் காணப்படும் நூல்களுள் சிலவும் இருண்டகாலப் பகுதியில் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்று கருதுவதற்கு இடம் உளது. அவை; எலிவிருத்தம், நரிவிருத்தம், கிளிவிருத்தம், முத் தொள்ளாயிரம் என்பனவாம். அவற்றுள், நரிவிருத்தத்தைச் சைவசமயகுரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசு அடிகளும், எலிவிருத்தம் கிளிவிருத்தம் ஆகிய இரண்டையும் அவ்வடிகள் காலத்தவராகிய திருஞான சம்பந்தரும் முறையே ஆதிபுரா, ணத் திருக்குறுந்தொகையிலும் திருவாலவாய்ப் பதிகத்திலும் குறித்துள்ளமையின், அந்நூல்கள் மூன்றும் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டனவாதல் வேண்டும். எனவே அவை கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் மதுரைமாநகரிலிருந்த சைனரது தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக நிலவிய அமண் சமயப்புலவர்களால் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது