பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



தே 11. திணைமொழி ஐம்பது இது, திணையொன் றிற்குப் பத்துப் பாக்களாக அகத்திணை ஐந்துக்கும் ஐம்பது பாக்களைத் தன்பாற் கொண்டது. இது பற்றியே இந்நூல் திணைமொழியைம்பது என்னும் பெயர் பெற்றது எனலாம். இதிலுள்ள ஐம்பது பாடல்களுள், நாற்பத் தாறு இன்னிசை வெண்பாக்களாகவும் நான்கு நேரிசை வெண் பாக்களாகவும் உள்ளன. இது பதினெண் கீழ்க்கணக்கு நூல் களுள் ஒன்றாகும். ஐந்திணையைம்பதைப்போல் இதுவும் சொற் பொருள் நயங்கள் நிறைந்த ஒரு சிறந்த நூல் என்பது தேற்றம். இந்நூலின் ஆசிரியர் கண்ண ன் சேந்தனார் ஆவர். இவர் சாத் தந்தையார் என்பவருடைய புதல்வர் என்று தெரிகிறது. இவ் வாசிரியரின் இயற்பெயரை நோக்குங்கால் இவர் சமண சமயத் தினர் அல்லர் என்பதும் சைவம் வைணவம் ஆகிய இரு பெரு நெறிகளுள் ஒன்றைக் கைக்கொண்டொழுகியவராதல் வேண்டும் என்பதும் நன்கு துணியப்படும். கடைச்சங்ககாலத்தில் வாழ்ந்த வரும் சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளியைப் பாடிய வரும் ஆகிய சாத்தந்தையார் என்ற புலவரே இவருடைய தந்தை யாராயிருத்தல் வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இக் கொள்கையை வலியுறுத்தும் சான்றுகள் இல்லாமையால் இதனை ஒருதலையாகத் துணிய இயலவில்லை. இனி, இந்நூலிலுள்ள

  • வானுயர் வெற்ப இரவின் வரவேண்டா

யானை யுடைய சுரம்' (பா. 1) * அரிபரந்த வுண் கண்ணாள் ஆற்றாமை நும்மின் தெரிவார்யார் தேரு மிடத்து ' (பா. 12) என்னுந் தோழி கூற்றுக்களும்

  • கரும்பின்கோ தாயினேம் யாம் ' (பா. 39) என்னும் தலைமகள் கூற்றும் இந் நூலின் தெளிவுடைமையை நன்கு புலப்படுத்துவனவாகும். அன்றியும்,