பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



64 தமிழ் இலக்கிய வரலாறு 'யாழுங் குழலு முழவு மியைந்தென வீழு மருவி விறன்மலை நன்னாட. மாழைமா னோக்கியு மாற்றா ளிரவரின் ஊரறி கௌவை தரும்' (பா.7) என்ற பாடலால் இந்நூலின் அருமை பெருமைகளைத் தெள்ளி தின் உணர்ந்து கொள்ளலாம். இதிலுள்ள + ஊரறிகௌவை தரும்' என்னும் ஈற்றடி, முத்தொள்ளாயிரத்தில் ' குன்று விளக்கேபோல்' என்று தொடங்கும் பாடலின் ஈற்றடியாகிய ' நாடறி கௌவைதரும்' என்பதனோடு சொல்லாலும் பொரு ளாலும் ஒத்திருத்தல் காண்க. இந்நூல் கி. பி. நான்காம் நூற் றாண்டில் இயற்றப்பெற்றதாதல் வேண்டும்.