பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



85 12. ஐந்திணை எழுபது இஃது அகப்பொருள் துறைகளுக்கு இலக்கியமாயுள்ள ஒரு சிறந்த நூல். ஒவ்வொரு திணைக்கும் பதினான்கு பாக்களாக ஐந்து திணைகட்கும் எழுபது பாக்களைத் தன்னகத்துக் கொண்டமை பற்றி இந்நூல் ஐந்திணை யெழுபது என்ற பெயர் எய்தியமை அறியத்தக்கது. இதில் இப்போதுள்ள பாடல்கள் அறுபத்தாறேயாம். எஞ்சிய நான்கும் சிதைந்தழிந்தன போலும். இந் நூலிலுள்ள செய்யுட்கள் இன்னிசை வெண்பாக்களாகவும் நேரிசை வெண்பாக்களாகவும் உள்ளன. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஐந்திணையைம்பதைப்போல் இதுவும் கற்போர் உள்ளத்தைக் கவரும் இயல்பினதாகும். இதில் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றுளது. அது யானை முகக் கடவு ளாகிய பிள்ளையார்க்கு உரியதாகும்.1 பிள்ளையாரென்று வழங் கப்பெற்றுவரும் விநாயகக் கடவுளின் வழிபாடு கி. பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழ் நாட்டில் தொடங்கியது என்பது ஆராய்ச்சியால் அறிந்ததோர் உண்மையாகும். எனவே, அக் கடவுளுக்கு வாழ்த்துக் கூறப்பட்டுள்ள பாடல் இந் நூலாசிரிய ரால் இயற்றப்பட்டதன்று என்பது தேற்றம். அக் கடவுள் வாழ்த்துச் செய்யுள் நூலின் புறத்தேயுள்ளமையும், அதற்குப் பழைய உரை காணப்படாமையும் இவ்வுண்மையை நன்கு வலியுறுத்துதல் அறியற்பாலதாம். இந்நூலின் ஆசிரியர் மூவாதியார் என்று கூறப்படுவர். இவர் சமண சமயத்தினர் என்று சிலர் கருதுகின்றனர். அவ் வாறு கொள்வதற்கு இந்நூலகத்துச் சான்றுகளின்மை உணரற் பாலது. இவ்வாசிரியரைப்பற்றிய செய்திகள் எவையும் இந் நாளில் கிடைக்கவில்லை. மூவாதியார் என்ற இவரது பெயர் கூட இவருடைய இயற்பெயரா அல்லது ஏதேனும் ஓர் 1. ' எண்ணும் பொருளினிதே யெல்லா முடித்தெமக்கு கண்ணும் கலையனைத்து கல்குமால்- கண்ணுதலின் முண்டத்தா னண்டத்தான் மூலத்தா னாலஞ்சேர் கண்டத்தா னீன்ற களிறு, II-5