பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



72 தமிழ் இலக்கிய வரலாறு நூல்களுள் ஒன்றாகிய அகநானூற்றில் காணப்படுகின்றது. ஆகவே, நல்லடியின் தந்தையாகிய சோழன் செங்கணான் என் பான் கடைச்சங்க காலத்திலிருந்தவன் என்பது நன்கு துணியப் படும். எனவே, அவன் கடைச்சங்க காலத்திலிருந்தவனல்லன் என்று கடறுவது எவ்வாற்றானும் பொருந்தாத தொன்றாம். முதுமொழிக்காஞ்சி இயற்றிய கூடலூர் கிழார் என்பவர், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை இறந்த பொழுது வருந்திப்பாடிய பாடலொன்று புறநானூற்றில் காணப்படுகின்றது. அன்றியும், அவ்வேந்தன் விரும்பியவாறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய ஐங்குறு நூறு தொகுத்த வரும் இப்புலவரேயாவர். எனவே, இவர் கடைச்சங்கப் புலவ ருள் ஒருவர் என்பது தேற்றம். ஆகவே, இவரது முதுமொழிக் காஞ்சியும் கடைச்சங்க காலத்தில் இயற்றப் பெற்ற நூலாதல் வேண்டும். இதுகாறும் விளக்கியவாற்றால் திருக்குறள், களவழி நாற்பது, முதுமொழிக்காஞ்சி ஆகிய மூன்று நூல்களும் கடைச்சங்க காலத் தில் தோன்றியவை என்பது நன்கு புலனாதல் காண்க. அக் காரணம்பற்றியே இவ்விருண்டகாலப் பகுதியில் அம்மூன்று நூல்களின் வரலாறும் ஆராய்ச்சியும் சேர்க்கப்படவில்லை. இனி, நாலடியார் என்ற நூலில் முத்தரையர் என்னும் பட்டத்துடன் திகழ்ந்த குறுநில மன்னரின் கொடைத் திறமும் சிறப்பும் இரண்டு பாடல்களில்2 கூறப்பட்டுள்ளன. முத்தரையரைப்பற்றிய செய்திகள் கி. பி. எட்டாம் நூற்றாண் டில் தான் முதலில் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. ஆகவே, அன்னோரைப் புகழ்ந்துரைக்கும் நாலடியாரும் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற நூலாதல் வேண்டும் என்பது ஒருதலை. எனவே, அந்நூல் தமிழகத்தின். வடபகுதி யில் பல்லவரும் தென்பகுதியில் பாண்டியரும் பேரரசர்களாய்ச் 1. புறம். பா. 229. 2. நாலடி, 200, 296, -