பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கைந்நிலை 73. சிறப்புடன் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த காலப் பகுதியில் தோன் றியது என்பது நன்கு தெளியப்படும். அதனால் இவ்விருண்ட காலப் பகுதியில் நாலடியாரைப் பற்றிய வரலாறு எழுதப்பட வில்லை . பாலகவேண்டும். தும் - நாலடி ந் நிலைய கா இன்னிலை என்னும் நூலொன்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சேர்த்து ஆராய்ச்சியாளர் சிலரால் கணக்கிடப்பட் டுள்ளது. அன்னோர் கருத்தின்படி. அதனைச் சேர்த்துக்கொண் டால் கைந்நிலை என்ற நூலைக் கீழ்க்கணக்கு நூல்களிலிருந்து விலக்கவேண்டும். ஆனால், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இவை என் றுணர்த்தும் ' நாலடி நானாற்பது' எனத் தொடங் கும் பழைய வெண்பாவில் மெய்ந்நிலைய காஞ்சியொடு ' இன் னிலை சொல் காஞ்சி யொடு' என்ற பாடங்கள் காணப்படுகின் றன. அவற்றை நோக்குங்கால், இன்னிலை என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றெனக் கோடற்கு இடமில்லை என்க. இன்னிலைச் செய்யுட்களுள் ஒன்றாதல் பழைய உரை யாசிரியர்களால் மேற்கோளாக எடுத்துக் காட்டப் பெறாமையும் இக்கருத்தை வலியுறுத்துவதாகும்.