பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



15. காரைக்காலம்மையார் நூல்கள் காரைக்காலம்மையார் இயற்றியனவாக இப்போது பதி னோராந் திருமுறையில் காணப்படும் நூல்கள் நான்காகும். அவை, அற்புதத் திருவந்தாதியும் திருவிரட்டை மணிமாலையும் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டுமாம். இவற் றுள், அற்புதத்திருவந்தாதி நூற்றொரு வெண்பாக்களைத் தன்ன கத்துக் கொண்டது. திருவிரட்டை மணிமாலை, வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமாகவுள்ள இருபது பாடல்களைத் தன் பால் உடையது. இவை இரண்டும் அந்தாதித் தொடையில் அமைந்தவை; சிவபெருமானுடைய பல்வகைச் சிறப்பினையும் ஒப்புயர்வற்ற நிலையையும் எடுத்துரைப்பவை. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டும் இருபத்திரண்டு செய்யுட்களை யுடையவை. இவை, தொண்டை மண்டலத்திலுள்ள வட திருவாலங்காடு என்னும் திருப்பதியில் அண்டமுற நிமிர்ந்தாடும் கூத்தப்பெருமான் மீது பாடப்பெற்றவையாகும். இப்பதிகங்கள் இரண்டிலுமுள்ள இறுதிப்பாடல்களிலும் அற்புதத் திருவந் தாதியின் கடைசிச் செய்யுளிலும்2 காரைக்காலம்மையார் தம் மைக் காரைக்காற் பேய் என்று கூறிக்கொண்டிருப்பது குறிப் பிடத்தக்கதாகும். இவ்வம்மையார் சிவபெருமானிடத்தில் வைத் திருந்த பேரன்பினை அற்புதத் திருவந்தாதியிலுள்ள இரண்டு பாடல்களால் நன்கறிந்துகொள்ளலாம். அவை, 1. (a) ' அப்பனை யணிதிருவாலங்காட்டு வடிகளைச் செடி தலைக் காரைக்காற் பேய்- செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்ப மெய்துவாரே | (மூத்த திருப்பதிகம், 11) (b) ' காடுமலிந்த கனல்வாயெயிற்றுக் காரைக்காற் பேய் தன் பாடல் பத்தும் பாடியாடப் பாவ நாசமே ' (மூத்த திருப். 11) ' உரையினா லிம்மாலை யந்தாதி வெண்பாக்-கரைவினாற் காரைக்காற் பேய்சொற்- பரவுவார் - ஆசாத வன்பினோ டண்ணலைச் சென் றேத்துவார் - பேராத காதல் பிறந்து " (அற்புதத் திருவந்தா . பா. 101)