பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



75 | காரைக்காலம்மையார் நூல்கள் * இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரு நெறிபணியா ரேனும்-சுடருருவில் என்பராக் கோலத் தெரியாடும் எம்மானார்க் கன்பறா தென்னெஞ் சவர்க்கு'

  • வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன் தானத்தான் என்பாருந் தாமென்க - ஞானத்தான் முன்னஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான் என்னெஞ்சத் தானென்பன் யான் 2'

என்பனவாம். இவ்வம்மையாரின் வரலாறு, திருத்தொண்டர் புராண மாகிய பெரிய புராணத்தில் சேக்கிழாரடிகளால் கி. பி. பன்னி ரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அறுபத்தாறு பாடல்களில் பத்திச் சுவையொழுகப் பாடப்பட்டுள்ளது. அவ்வரலாற்றின் சுருக்கமாவது : காரைக்காலம்மையார், சோழமண்டலத்திலே கீழ்கடலைச் சார்ந்த காரைக்கால் என்னும் பெரும்பதியில் எல்லாச் செல்வங்களிலும் சிறந்து விளங்கிய தனதத்தன் என்ற வணி கற்குப் புனிதவதி என்னும் பெயருடைய புதல்வியாய்த் தோன்றி, நாகையம்பதியிலிருந்த நிதிபதியின் புதல்வன் பரம தத்தன் என்பவனை மணந்து இல்லறம் நிகழ்த்திவரும் நாட் களில், அவன் கொண்டுவந்த இரு மாங்கனிகளுள் ஒன்றினைத் தம் வீட்டில் உண்ட சிவனடியார் ஒருவர்க்கு அளித்துவிட்ட மையால், அதனைக் கணவன் கேட்ட ஞான்று சிவபெரு மான் திருவருள் துணை கொண்டு வேறு ஒரு பழம் வருவித்துக் கொடுக்க, அப்பழம் முதலில் உண்டதைக் காட்டிலும் பெருஞ் சுவையுடையதாயிருத்தலை யுணர்ந்த கணவன் ஐயுற்றுக் கேட்டபோது, அம்மையார் இன்றியமையாமைபற்றி உண்மை நிகழ்ச்சியை யுணர்த்தினாராக, அவன் அதனைச் சோதிக்க 1. அற்புதத் திருவந்தாதி பா. 2. 2. ஷ பா. 6.