பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



தமிழ் இலக்கிய வரலாறு வேண்டி மற்றொரு மாங்கனி வருவிக்குமாறு கூற, அங்ஙனமே மற்றொன்றும் வந்து விரைவில் மறைந்துபோகவே, அதனால் பேரச்சம் எய்திய கணவன் தக்க சமயம் பார்த்து வாணிகத்தின் பொருட்டுச் செல்பவன்போல் அம்மையாரைவிட்டு நீங்கிப் பாண்டி நாட்டிற்குச் சென்று மறு மணம்புரிந்து வாழ்ந்துகொண் டிருந்த காலத்தில், உறவினர் அம்மையாரை அழைத்துக் கொண்டு அங்குச் சென்றபோது, அவன் அம்மையாரைத் தெய்வமென்று கூறி அடிகளில் வீழ்ந்து வணங்குதலும், அதனைக் கண்ட அம்மையார் பெருநாணமுற்று இல்வாழ்க்கையில் பற் றின்றி அதனைத் துறந்து, சிவபெருமானை வேண்டிப் பேய் வடி வம் பெற்றுக் கயிலைக்குச்சென்று அப்பெருமானால் - அம்மையே' என் றழைக்கும் பேறு பெற்று, வட திருவாலங் காட்டிற்குத் திரும்பிவந்து ஆடவல்லான் றன் எடுத்த திருவடிகளின்கீழ் என் றும் இருந்து இன்புறும் பெருநிலை யெய்தினர்-என்பதாம். இவ்வம்மையார் பேய்வடிவம் பெற்றனர் என்பது உடலில் தசை மிகவுங் குறைந்து போகவே, எற்புச் சட்டகமாக நிலவினர் என்பதை உணர்த்து மென்று கூறலாம். கி. பி. ஏழாம் நூற்றாண் டில் நம் தமிழகத்தில் விளங்கிய சைவசமய குரவராகிய திருஞான சம்பந்தர், இவ்வம்மையார் தலையால் நடந்து சென்று வழிபட்ட திருவாலங்காட்டில் தாம் அடிவைத்து நடத்தற்குப் பெரிதும் அஞ்சிப் புறத்தேயுள்ள பதியொன்றில் தங்கியிருந்தனரென்று சேக்கிழாரடிகள் தம் திருத்தொண்டர் புராணத்தில் கூறியுள்ள னர்.1 எனவே, திருஞான சம்பந்தருக்கு முற்பட்டவர், காரைக் காலம்மையார் என்பது தேற்றம். ஆகவே, கி. பி. ஏழாம் நூற் றாண்டிற்கு முற்பட்ட இருண்டகாலப் பகுதியில் இருந்தவர் இவ் வம்மையார் என்பது தெள்ளிது. எனவே, இவர் அற்புதத் திரு வந்தாதி, இரட்டைமணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதி கங்கள் ஆகிய நான்கு நூல்களையும் கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் இயற்றியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இந்நூல்களில் இவ்வம்மையார் ஆண்டுள்ள சங்கரன், வேதி 1. திருத் தொண்டர் புராணம், திருஞான சம்பத் தமூர்த்தி சுவாமிகள் - புராணம், பா. 1008.