பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



காரைக்காலம்மையார் நூல்கள் யன், உமை, அரன், ஈசன், இயமானன், சேமம், கணம், ஆரம், அந்தரம், சிரம், சோதி, கமலம், சிரமம், அந்தி, சரணாரவிந்தம், அட்டமூர்த்தி, ஞானமயம், அந்தாதி ஆகிய வடசொற்களும் தொடர்களும், அற்புதத் திருவந்தாதி என்ற நூற்பெயரும், வட மொழி தமிழகத்தில் மிகப் பரவியிருந்த கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் இந்நூல்கள் தோன்றியிருத்தல் வேண்டு மென்பதை உறுதிப்படுத்துதல் காண்க. அம்மையாரது அற்புதத்திருவந்தாதியிலுள்ள " நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக் நீல மணிமிடற்றான் நீர்மையே-மேலுலந்த தெக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவே யாம்' ' அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே-அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன் ' என்ற வெண்பாக்கள் சைவ நெறியின் சீரிய கொள்கைகளை அறிவுறுத்துதல் உணரற்பாலதாகும்.