பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

அம்மையாருக்கும் பிறந்தவர், குழவிந் பருவத்திலேயே இறைவி பாலூட்ட ஞானம் பெற்றவர்.

இவர் தம் தந்தை தோளில் அமர்ந்து கோயில் தலங்கள்தோறும் சென்று கைத்தாளமிட்டுப் பாடல்கள் பல பாடினார்: திருக்கோலாக்கா என்னும் திருப்பதியில் இறைவன்பால் பொற்றாளம் பெற்று நாளும் இன்னிசையால் தமிழைப் பரப்பி வந்தார்; அறத்துறையில் முத்துப் பல்லக்கினையும் திருபட்டீசுவரத்தில் முத்துப் பந்தலையும், திருவாவடுதுறையில் பொற்கிழியையும், திருவீழிமிழலையில் படிக்காசும் பெற்றார். திருநல்லூரில் இவருக்குத் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மணமகளோடும் பிறரோடும் பெருமணம் என்ற கோயிலை அடைந்து இறைவனோடு இரண்டறக் கலந்தார்.

நரசிம்ம பல்லவனின் தானைத்தலைவரை இவர் சந்தித்ததாகப் பெரிய புராணம் கூறுவதால் இவரது காலம் ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்பர், தம் காலத்தவராய திருநாவுக்கரசரை இவர் இருமுறை சந்தித்திருக்கிறார்.

'வாவிதொறும் வண்கமலம் முகங்காட்டக் செங்கு
முதம் வாய்கள் காட்ட
காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டும்
கழுமலமே'

எனும் வரிகள் இவரது இயற்கை வருணனைக்கும்

'சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனோடுபால்
முறையாலே உணத் தருவன் மொய்பவளத் தோடு தரளம்
துறையாரும் கடல்தோணி புறத்தீசன் துளங்கும் இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே

த-5