பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

இது தோன்றியது. இது 10 சருக்கங்களையும் 1894 பாக்களையும் கொண்ட சமண நூல் எனத் தெரிகிறது.

இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை; சமண முனிவரால் இயற்றப்பட்டது என அறிய முடிகிறது. ஐந்து கருக்கங்களையும், 320 பாடல்களையும், இதுகொண்டுள்ளது. அவந்தி நாட்டு மன்னன் யசேதேரன் என்பவனின் வரலாற்றை நவில்கிறது. இசையை இழித்துக் கூறுகிறது.

4. உதயன குமார காவியம்

இஃது உதயணின் வரலாற்றைக் கூறுகிறது. இஃது பெருங்கதையின் வழி நூலாகும். இதன் பாடல்களின் எண்ணிக்கை 367, இஃது உஞ்சைக் காண்டம் இலாவண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவான காண்டம் என ஐந்து காண்டங்களைக் கொண்டது. நூலாசிரியரின் காலமோ, பெயரோ அறியக்கூடவில்லை.

5. நாககுமார காவியம்

இது சமண சமயச் சார்புடையது என்பது தவிர வேறு ஏதும் தெரியவில்லை. யசோதர காவியம் போல் இதுவும் வடமொரு பற்றியதாக இருந்திருக்கலாம்.

பெரிய புராணம்

இதன் ஆசிரியர் சேக்கிழார். இவர் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார்; இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தார். இந்நூலுக்குச் சுந்தரர் இயற்றிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பிகள் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியும் முதல் நூல்களாக அமைந்தன.

இஃது சைவத்திருமுறைகளுள் பன்னிரண்டாம் திருமுறையாக விளங்குகிறது; சைவ நாயன்மார்களின் பெரும்