பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலத்தீன் - பிராஞ்சு - தமிழ் அகராதி

இந்த அகராதியில் முதலில் இலத்தீன் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன; பி ன் ன ர் அவற்றிற்கு நேரான பொருளுடைய பிரெஞ்சுச் சொற்களும் தமிழ்ச் சொற்களும் முறையே இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் தரப்பட்டுள்ளன. இவ்வகராதியில் மூன்று மொழிகள் இடம் பெற்றிருப்பதால், மூன்று மொழிகளிலும் நூலுக்குப் பெயர் கொடுக்கப் பட்டுள்ளது. இது, பெரிய அளவுள்ள 1480 பக்கங்கள் கொண்ட மிகப் பெரிய அகராதியாகும். 1846-ஆம் ஆண்டு புதுச்சேரி மா தா கோ யி ல் அச்சகத்தில் இந்நூல் அச்சிடப்பட்டுள்ளது.

இந்நூலைப் பற்றிய விவரம் அறிவிக்கும் நூல் முகப்புப் பக்கம் (Title page) நூலிலுள்ளாங்கு இனி வருமாறு: