பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

உயர்திரு ழான் ஃபிலியோசா (Jean Filliozat) அவர்கட்கு என் பெரு நன்றி உரியது. அ டு த் து, இத்தகைய உதவி புரிந்த புதுச்சேரி அரசு நூலகக் காப்பாளர்க்கும் என் நன்றி உரித்து. மற்றும், எனக்குப் பல வகையிலும் உதவி புரிந்த அறிஞர் கட்கும் நண்பர்கட்கும் மிக்க நன்றி செலுத்துகிறேன்.

பாலம் திறப்பு:

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கப் பெற்று, உலக நாடுகளில் உலகத் தமிழ் மாநாடுகள் கடத்தப்பெற்று, த மி ழ் மொழி ‘உலகத் தமிழ்’ என்னும் சிறப்புப் பெயருடன் உலகில் பரவத் தொடங்கியுள்ள இந்நாளில், யான் புதிதாகத் தமிழ்இலத்தீன் பாலம் கட்டவில்லை; இதற்கு முன்பே தமிழ் உலகத் தமிழ் ஆ கு ம் அளவில் பன்னட் டறிஞர்களால் கட்டிவைக்கப்பெற்றுள்ள தமிழ் இலத்தின் பாலத்தை யான் திறந்து வைக்கிறேன்அவ்வளவுதான் !

தமிழ் மொழியோடு பிற மொழிகளே ஒப்பிட்டு ஆராயும் நூற்கள் வரவேற்கப்படும் என்று தகுதி வாய்ந்த பெரியோர்களால் அறிவிக்கப்படும் இங் காளில் சிறியேனது நூலுக்கு எத்தகைய வரவேற்பு இருக்குமென அறியேன். எனது மு ய ற் சி க் கு ம் போதிய வாய்ப்பளித்து என்னை ஊ க் கி ப் பணி கொள்ளுமாறு தொடர்புள்ள அ ன வ ைர யு ம் வேண்டுகிறேன். வணக்கம்.