பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151


மியன்றமட்டுந் தமிழ்ப் பா ைஷ யி னடைக்கும் பொருத்தமாகத் திருப்பினது மல்லாமல் இலத்தி னிலுங் தமிழிலு மொழிபெயர்க்கிறதற்கு வருத்த மாகிய அநேக சொற்களையும் வசனங்களையும் நவ மாய்ச் சேர்த்து அவைகளை மொழிபெயர்க்கும் வகையையுங் காட்டிைேம். ஆதலா லிதின் துவக்கத் திலுள்ள இலத்தின் பாஷையின் நெடுங்கணக்கு மதைச் சேர்ந்த விவரங்களுமன்றி யிதிலே மூன்று வகுப்புமுண்டு. முதல் வகுப்பி லந்தந்தச் சொல்லை வகையறுத்து வி வ ரி. த் துத் தெளிவிக்கிருேம். இரண்டாம் வகுப்பி ல ங் த ங் த வகைச் சொல் தொடரியலே விளக்குகின்றாேம். மூன்றாம் வகுப் பிலே இலத்தீன் பாஷைக்குங் தமிழ்ப் பாஷைக்கும் வித்தியாசமான வசனங்களை மொழிபெயர்க்கும் வகையைத் தெளிவிக்கிருேம்.

சாஸ்திரங்களை விரும்பிய சகலர்க்குங் தேவசித் தத்தாற் குருப்பட்டத்துக்கு நியமிக்கப்படுகிறவர்க ளுக்கும் விசேஷமா யிது பிரயோசனமாகு மென்கிற நம்பிக்கையா லிதை அச்சிற் பதிப்பித்தோம். ஆதலாற் பிரியமான மாணக்கரே! இலத்தீன் படிப் பிலுள்ள மிகுதியான நன்மைகளை யறிந்து இதனேக் குறையறப் படித்து உங்களினிமித்தம் பிரயாசப் பட்டவருக்காகப் பரமகர்த்தரை வேண்டிக்கொள் வீர்களாக.

O

மேலே தரப்பட்டுள்ள பாயிரப் பகுதியால் சில செய்திகள் தெரியவருகின்றன. இலத்தின் மொழி யின் இன்றியமையாமை மிகவும் அழுத்தம் திருத்த