பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194


ஒன்பது + பத்து என்னும் .ெ சா ற் க ள் புணர்ந்து தொண்ணுாறு எனவும், ஒன்பது - நூறு என்னும் சொற்கள் புணர்ந்து தொள்ளாயிரம் எனவும் ஆயின எனத் தொல்காப்பியரும் நன்னூ லாரும் கூறியிருப்பதைத் தேவநேயப் பாவாணர் மறு த் தி ரு ப் பது ஏற்றுக்கொள்ளத் தக்கதே. ஆயினும், ‘தொண்டு என்னும் சொல் 9-ஐயும், ‘தொண்பது’ என்பது 90-ஐயும், ‘தொண்ணுாறு’ என்பது 900-ஐயும், தொள்ளாயிரம் எ ன் ப து 9000-ஐயும் மு ன் பு குறித்தன; இவற்றுள் ‘தொண்டு என்னும் சொல் வழக்கற்றுப் போய் விட்டதால், மற்றவை ஒவ்வொரு படி கீழிறங்கி விட்டன; அதாவது, 9000-ஐக் குறித்த தொள் ளாயிரம் என்னும் சொல் 900-ஐயும், 900-ஐக் குறித்த தொண்ணுாறு என்னும் சொல் 90-ஐயும், 90-ஐக் குறித்த தொண்பது எ ன் னு ம் சொல் தொன்பது - ஒன்பது எனத்திரிந்து 9.ஐயும் குறிக்கலாயின - என்று பாவாணர் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்வதற் கில்லே. தொண்டு எ ன் னு ம் சொல் வழக்கற்றுப் போனல், தொண்பது, தொண் ஆணுாறு, தொள்ளாயிரம் என்னும் சொற்கள் அப் படியே இல்லாமல் ஒவ்வொரு படி ஏன் குறைந்துவர வேண்டும்? இஃது இயற்கைக்குப் பொருத்தமாகத் தெரியவில்லையே! மேலும், தொண்பது என்னும் சொல் ஒன்பது என மருவியதாகக் கூ று வது ம் பொருந்துவதா யில்லை. அங்ஙனமெனில், ஒன்பது, தொண்ணுாறு, தொள்ளாயிரம் என்னும் சொற்கள் பற்றிய உண்மையான தீர்வுதான் யாது? அதனை இங்கே நாம் கண்டுபிடித்தாக வேண்டும்.