பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


பல்கலைக் கழகப் பேராசிரியர் எம். பி. ஏமெனே (M. B. Emeneau) போன்றாேர் சில ர் திராவிட மொழிகளை உலக மொழிகளோடு பிணைத்துப் பேசி யுள்ளனர்.

ஞா ன ப் பி ர கா ச அடிகளார் 1988 ஆம் ஆ ண் ட ள வி ல், ‘சொற்பிறப்பு-ஒப்பியல் தமிழ் -94 str” (An Etymological And Comparative Lexicon of the Tamil Language) GT 6ir g) Lb அகராதி யொன்று படைத்தார். இதில், சொற் பிறப்பும் மொழி ஒப்பியலும் விரிவாகக் கூறப்பட் டுள்ளன. தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல் லாலும் தமிழ்ச் சொல்லாலும் பொருள் கூறப்பட் டிருக்கும் இவ்வகராதியில், எடுத்துக்கொண்ட ஒரு சொல், எந்த வே ரி லி ரு ந் து எப்படிப் பிறந்து உருவாகிறது என்பது காட்டப்பட்டிருப்பதோடு, அத்தமிழ்ச் சொல் மற்ற இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் ஒத்த நிலையில் வழங்கப் படுகிற அவ்வம் மொழியுருவங்களும் (Indexes of Words Quoted from Indo-European Languages) கொடுக்கப்பட்டிருப்பது, இவ்வகராதிக்கு மட்டு மன்றித் தமிழ் மொழிக்கும் மாபெருஞ் சிறப்பளிக்கிறது. ஞான ப் பி ர கா ச அடிகளார், நூலின் முன்னுரையில் பின்வருங் கருத்துக்களைத் துணிந்து வெளியிட்டுள்ளார்:

“தமிழ்ச் சொற்கள் முதல்முதல் மக்களினத்தில் மொழி தோன்றத் தொடங்கிய காலத்தில் எழுந்த சொல்லொலிகளே அடிப்படையாகக் கொண்டவை;