பக்கம்:தமிழ் உரை நடை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 தமிழ் உரைநடை தொல்காப்பியத்தில் உரைநடை பற்றிய குறிப்பு வரு கிறது. சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகின்றது. முதன்முதல் உரைநடை நூலாக அமைந்தது இவ்விறையனர் களவியல் உரையே என்ன லாம். இதுவும் தொடர்ந்த உரை நடை நூலாகாது. பாட்டுக்கு உரை கூறுவதாய் அதன் வழிப் பல மேற்கோள் பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது. இதன் உரை நடையும் பா நடையை ஒத்து எதுகை மோனையும் ஒசையும் கொண்டு, அளபெடை முதலிய செய்யுள் இலக்கணம் தழுவி, பல வடமொழிச் சொற்களை உட்கொண்டு எழுதப் பெற்றதாய் அமைகின்றது. அடுத்து வரப்போகின்ற பெரிய உரையாசிரியர்களுக்கெல்லாம் வழி காட்டியாகவும் வடமொழியும் தமிழும் கலந்து கின்ற ஈடு போன்ற மணிப்பிரவாள நடைக்கு வித்திட்டதோ என்னுமாறும் இவ்வுரை செல்கிறது என்பர் சிலர். வைணவ நூலாகிய ஈடொன்றைத் தவிர்த்து, மற்றவை மணிப்பிரவாள நடையில் இல்லை. இந்நூலும் வடமொழியை அதிகமாக எடுத்தாளினும், நடையில் தமிழாகவே அமைகின்றது. எனவே, இது வடமொழிச் சேர்க்கைக்கு இடந்தந்தது. என்று கூறுவதல்லது, மணிப்பிரவாள நடை இதன் அடி ஒற்றி எழுந்தது என்பது பொருந்தாது. மற்றத் தொல் காப்பியம், சிலப்பதிகாரம் முதலியவற்றிற்கு உரை செய்த பேராசிரியர்களுக்கெல்லாம் இவ் வுரைகடை ஒரு வழி காட்டியாய் அமைகின்றதென்பதை யாரே மறுக்க வல்லார் இரண்டடிச் சூத்திரத்திற்கு அறுபது பக்க அளவு விரிந்த உரை எழுதும் இவ்வுரையாசிரியர் திறனைப் போற்ருதிருக்க முடியுங்கொல்! அதுவும் உரை நடை சிறக்கத் தோன்ருத அந்தக் காலத்தில் இத்துணை அழகாகத் திறம்பட உரை எழுதி, தமக்குப் பின்வரும் அனைவருக்கும் வழிகாட்டியாக - தமிழ் உரை நடைப் பாதையிலே ஒரு சிறந்த மைல் கல்லாக - அமைத்த இவ்விறையனர் களவி யலுரையை அறிஞர் அறிந்து, ஆய்ந்து, அமைந்து, பயில் தொறும் இன்பம் காண்பார்களாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/105&oldid=874368" இலிருந்து மீள்விக்கப்பட்டது