பக்கம்:தமிழ் உரை நடை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 தமிழ் உரை நடை: பெற்றன குறையாத போது நின்ற தத்தம் நிறைவு நிலைப் பெயரளவேயாக உணரப்படுமென் பார், நிறைப் பெயரியல' என்ருர் என்பது இதுவும் ஒரு கருத்து.' என மற்றவர் கருத்துக் காட்டி ஏற்கும் திறம் அறிந்து கொள்க. - இவ்விளம்பூரணர் பொருளதிகாரத்துக்கும் உரை கண்டுள்ளார். அவ்வுரையுள் ஒரு சிலவற்றை ஈண்டு மேற் கோள்களாக எடுத்துக்காட்டி மேலே சொல்லலாம் : ': மேவிய சிறப்பின் ஏனேர் படிமைய’ என்பது, நால்வகை நிலத்தினும் மேவிய சிறப்பை யுடைய மக்களல்லாத தேவரது படிமையவாகிய பொருள்கள் என்றவாறு. 'முல்லை முதலாச் சொல்லிய" என்பது, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லிய நிலத்தின் மக்கள் என்ற வாறு முறையால், பிழைத்தது பிழையாதாதல் வேண்டியும் பிரிவே என்பது, மேற் சொல்லப் பட்டன முறைமையில் தப்பிய வழித் தப்பாது அறம் நிறுத்தற் பொருட்டும் பிரிவுளதாம் என்ற வாறு. இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே' என்பது, சொல்லப்பட்ட பொருள் முடிய வேண்டி யும் பிரிவு உளதாம் என்றவாறு." - என அகத்திணையியல் 30 ஆம் குத்திரத்திற்கும், மிக்க காமத்து மிடலாவது, ஐந்திணைக்கண் நிகழும் காமத்து மாறுபட்டு வருவது. அஃதாவது, வற்புறுத்துந் துணையின்றிச் செலவழுங்குதலும், ஆற்றருமை கூறுதலும், இழிந்திரந்து கூறுதலும், இடையூறு கிளத்தலும், அஞ்சிக் கூறுதலும், மனைவி விடுத்தலிற் பிறன் வயிற்சேறலும், இன்ைேரன்ன 1. நமச்சிவாய முதலியார் பதிப்பு, பக். 252 2. கழகப் பதிப்பு, பக். 31 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/119&oldid=874383" இலிருந்து மீள்விக்கப்பட்டது