பக்கம்:தமிழ் உரை நடை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னைய உரையாசிரியர்கள் 12? உலகம் என்றென்றும் கடமைப்பட்டதாகும் இப்பகுதியில் அக்காலத்தில் வாழ்ந்த சிறந்த உரையாசிரியர்களாகிய அடியார்க்கு கல்லார், பரிமேலழகர் ஆகிய இவர்தம் உரை வளத்தினைக் கண்டு மேலே செல்லலாம். சிலப்பதிகாரத்துக்கு உரை செய்தவர் அடியார்க்கு கல்லாராவர் அவர் காலத்தையும் ஓரளவு அறுதியிட்டு முன்னமே கண்டோம். அவர்தம் உரைநடையும் மற்ற உரையாசிரியர்களுடைய foL-600th I ஒட்டியதாகவே அமைகின்றது. அவர் இசை, நாடகம் முதலியவற்றிற்கு விளக்கம் காட்டுங்கால் எத்தனையோ நூல்களையும் கருவி களையும் பழக்க வழங்கங்களையும் காட்டிக்கொண்டே செல்கின்ருர். அவர் காலத்தில் அத்துணை இசைக் கருவி களும் நடன அமைப்பு முறைகளும் இருந்தன என அறிய அவர் உரையின்றி வேறு கிடைக்கவில்லை. அவர் உரை சிலப்பதிகாரத்துக்கு முழுதும் இல்லை. பத்தொன்பதாவது காதையாகிய ஊர் சூழ் வரியுடன் அவர் உரை முடிகின்றது. பின் உரை இல்லாமைக்குக் காரணம் யாதோ அறியோம். அதற்குள் அவர் வாழ்நாள் எல்லேயினின்று விளிந்தாரோ என கினைக்க வேண்டியுள்ளது. இருக்கும் அந்த ஒர் உரையே இடைக்காலத் தமிழ் நாட்டை உலகுக்குக் காட்டும் ஒளி விளக்காய் இருக்கின்றது. சிலப்பதிகாரத்துக்கு அரும்பத உரையாசிரியர் தம் அரும்பத உரையும் உண்டு. 'அடியார்க்கு கல்லாருரையில் காணப்படாத பல மேற்கோள்களும் சில நூற்பெயர்களும் இவ்வுரையிற் காணப்படுகின்றன. வாக்கியங்களின் முதலிறுதிகளையேனும், முதலைமட்டு மேனும், சொற்களே யேனும் எ ழு தி ப் பொரு ளெழுதுவதும், ஒன்றையு மெழுதாது பொருளே மட்டும் எழுதிக்கொண்டு போவதும் இவ்வுரையாசிரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/130&oldid=874397" இலிருந்து மீள்விக்கப்பட்டது