பக்கம்:தமிழ் உரை நடை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தமிழ் உரை நடை ஒரு கல்வெட்டைப் பிழையற நல்ல முறையில் எழுதினல் எப்படி அமையும் என்பதைக் காட்டி இப்பகுதியை முடிப்போம்: - "ஆண்டு 19 வது நாள் இருநூற்று நாற்பத் திரண்டினில் உடையார் பூரீ ராஜேந்திர சோழ தேவர் கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயிலி :னுள்ளால் முடிக்கொண்ட சோழன் திருமாளிகை .யில் வடபக்கத்துத் தேவராத்துச் சுற்றுக் கல்லூரி யில் தானம் செய்தருளாவிருந்து உடையார் பூரீ இராசராசேசுவர முடையார் கோயிலில் ஆசாரிய போகம் நம் உடையார் சர்வ சிவ பண்டித சைவாசார்யருக்கும், இவ்வுடையார் சிஷ்யரும் .பிற சிஷ்யருமாய் ஆர்யதேசத்தும் மத்திய தேசத்தும் கெளட தேசத்தும் தாம் உள்ளாராய், யோக்கியராய் இருப்பார்க்கே ஆண்டுதோறும் இத்தேவர் கோவிலில் ஆடவல்லான் என்னும் மரக்காலால் உள்ளுர்ப் பண்டாரத்தே நிறைச் சளவாக இரண்டாயிரக் கல நெல் ஆண்டாண்டு தோறும் சந்திராதித்தவரை பெறத் திருவாய் மொழிந்தருளத் திருமந்திர ஓலை செம்பியன் விழுப்பரையன் எழுத்தினல்-திருவாய்க் கேள் விப்படி கல்லில் வெட்டுவித்தது. இது'." என்று நல்ல தமிழிலே இக்கல்வெட்டின் உரை நடை அமைகின்றது. இவ்வாறே கல்வெட்டு உரை கடை வட மொழிச் சொற்களைச் சற்று அதிகமாகக் கொண்டு அக் காலத்தில் எழுதப்பெற்று அமைந்து சிறந்தது என்க. 1. தென்னிந்திய சாசனம், Vol. 11. Part, 1, கி.பி.1030. தஞ்சைப் பெரிய கோயில் நடுவிடத்து மூலத்தானத்தெற்குச் .க்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/151&oldid=874420" இலிருந்து மீள்விக்கப்பட்டது