பக்கம்:தமிழ் உரை நடை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் வடமொழியும் 155, என்ருலும், அதன் காலம் எட்டாம் நூற்ருண்டே என அறுதியிட முடிகின்றது. அடுத்துப் பின்னல் வந்த பல உரையாசிரியர்கள் தங்கள் கால கிலேக்கு ஏற்பப் பழக் தமிழ் இலக்கிய இலக்கணங்களுக்குப் புதுப்புது வகையான உரைகளைக் காண முயன்றிருக்கின்ருர்கள். அந்த வேறு: பாட்டு உணர்வுக்குக் காரணம் காலக்கோளாறேயன்றி, அவர்தம் கருத்துக் கோளாறு அன்று. இன்று புலவர்கள் ஆராய்ச்சி வழி அத்தகைய குறைகளைப் போக்க முயன்று. ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிருர்கள் என்னலாம். எனி. னும், இன்னும் சிறந்த ஆராய்ச்சி தேவையாகும். தமிழில் வடமொழியை அதிகமாகக் கலந்து எழுது: பவனே புலவனென அக்காலத்தில் மதிக்கப்பட்டான் போலும் இந்நூற்ருண்டின் தொடக்கத்தில் பலர் தமிழ் நாட்டில் தமிழில் பேச வராது எனக் கூறி, ஆங்கிலத்தில் பேசுவதுதான் பெருமை என எண்ணிக்கொண்டிருந்ததைக் கண்ட நமக்கு அன்றைய உணர்ச்சியின் பொருளே விளங்கிக்கொள்ளுதல் எளிதாகும். நாடாளும் மன்னரும் புலவரும் அக்கருத்தை உடையவர்களாய் இருந்த மையின், அம்மொழி தமிழரிடைத் தமிழ் நாட்டில் சிறந்து வாழ்ந்தது என்னலாம். அம்மொழிவாணருக்கு இரணிய கருப்பம்', 'துலாபாரம் போன்ற பொற்றருமங்களும். தேவதானம், பிரமதேயம் போன்ற நிலத் தருமங்களும் அக்கால மன்னர்கள் வாரி வழங்கியுள்ளார்கள். எனவே, அக்காலத்தில் சிறப்பாகப் பல்லவர், பிற்காலச் சோழர் காலத்தில் வடமொழி தமிழில் க ல ங் த ேத ா டு: மட்டுமன்றி, தமிழினும் மேம்பட்டது என்னுமாறு சிறந்தும். வளர்ந்தது. அதன் தலைவர்களே காட்டில் உயர்ந்தவர்கள் என்று போற்றப் பட்டார்கள். அக்காலத்தில் மணிப் பிரவாளம் என்னும் வடமொழியும் தமிழும் விரவிய ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/164&oldid=874434" இலிருந்து மீள்விக்கப்பட்டது