பக்கம்:தமிழ் உரை நடை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தமிழ் உரை நடை பிற இலக்கண நூல்கள் தெரிவதில்லை. அவற்றின் பெயர்கள்கூடத் தமிழ் அறிஞர்களுக்கே தெரியாத வகை யில் அவை மறைந்து விட்டன என்னலாம். இவ்வாறு இடைக்காலத்தில் தமிழினும் மேம்பட்டதாகக் காட்டிக் கொண்டு இலக்கிய இலக்கணம் பெற்று வளர்ந்த வட மொழி இந்த நூற்ருண்டில் சிறிது தன் இடம் விட்டுச் சென்று விட்டது என்னலாம். இருபதாம் நூற்ருண்டுக்கு இடையிலே மொழி வரலாற்றை அறியும் திறனே ஒரு பெருங்கலையாக வளர்ந்து வருகின்றது. மேலே நாட்டு அறிஞர்கள் இத் துறையில் பல காலமாகவே தங்கள் கருத்திருத்தி ஆவன செய்து வருகிருர்கள். அந்த முறையில் இந்தப் பாரத நாட்டிலும் பல மொழி ஆராய்ச்சியாளர்கள் தோன்றி வளர்ந்து வளம் கண்டு வருகிருர்கள். சென்ற நூற் ருண்டில் வாழ்ந்த கால்டுவெல் போன்ருர் இது தமிழ்ச் சொல் இது வடசொல் எனப் பகுத்துக் காட்டிய வழியே இன்று பலர் ஆராய்கின்றனர். இன்று கலந்து வழங்கிய வடமொழிச் சொற்களே மறுபடியும் நீக்கித் தனித் தமிழில் பேச வேண்டும் என்ற உணர்வு தலைதுாக்கியுள்ளது. இப்பணிக்கு வழி காட்டிகளுள் முதன்மையானவர் ஆசிரியர் மறைமலை அடிகள் என்னலாம். இன்று ஆரிய மொழிச் சொற்களாகியவை இவை என்று ஆராய்வதில் பலர் முன்னிற்கின்றனர். ஆல்ை, அதிலும் இரு துருவ எல்லைக் கற்கள் தெரிகின்றன. ஒரு சிலர் எல்லாவற்றையும் வடமொழிச் சொற்களெனவும், சிலர் எல்லாவற்றையும் தமிழ்ச் சொற்களெனவும் காட்டி, அவற்றை விளக்கு முகத்தான் வேடிக்கையான விளக்கங்களையும் பகுப்புக் களையும் கையாளுவார்கள். இதில் காய்தல் உவத்தல் இன்றி நோக்கின், தமிழ்ச் சொற்களிலிருந்து வடமொழிச் சொற்களைத் திட்டமாகப் பிரிக்க இயலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/171&oldid=874442" இலிருந்து மீள்விக்கப்பட்டது