பக்கம்:தமிழ் உரை நடை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 - தமிழ் உரை நடை இவ்வாறு மேலே காட்டிய மூவரும் இலக்கண நூலே எழுதி யுள்ளார்கள். அதுபற்றி இங்கு நாம் ஆராயத் தேவை இல்லை. எனினும், இவர்கள் இலக்கண நூலுடன் உரை, கடையிலேயும் நூலே எழுதி உதவினர்கள் என்பதே நாம் இங்குக் காணவேண்டியதாகும். - இம்மூவரும் தத்தம் இலக்கண நூல்களுக்குத் தாமே உரை எழுயுள்ளதைக் காண்கிருேம். தமிழ் மரபுப்படி நூல் எழுதுபவரே உரை எழுதும் வழக்கம் இல்லை. "உரைகாரர்' என்றே தனியாக வேறு ஒருவர் இருப்பதைக் காண்கிருேம். தொல்காப்பியம் முதலிய பேரிலக்கண நூல்களுக்கும், பத்துப் பாட்டுப் போன்ற பேரிலக்கிய நூல்களுக்கும் அவற்றின் ஆசிரியர்களே உரை எழுதி விட் டிருப்பார்களாயின், பின்னல் இத்தனை உரை நடை நூல்கள் தோன்றியிரா. அத்துடன் புதுப் புதுக் கருத்துக்கள் காலத் 'துக்கு ஏற்ப மாற்றமும் ஏற்றமும் பெற்றுக் காட்டக்கூடிய நிலையில் அமையா. எனவே, கருத்து வளர்ச்சிக்கும் மொழி வளர்ச்சிக்கும் இடம் தேடக் கருதிய தமிழ் நாட்டில் தம் நூலுக்குத் தாமே உரை எழுதுகின்ற வழக்கத்தைப் புலவர் மேற்கொள்ளவில்லை. ஆனல், இந்த மூவரும் அம்மரபுக்கு மாருகத் தாமே தம் நூலுக்கு உரையும் எழுதினர் என்ருல், அதற்குக் காரணம் என்ன ? இம்மூவருடைய கருத்துக்களும் நாம் மேலே கண்ட படி தமிழ் இலக்கண முறைக்கு மாறுபட்டனவேயாகும். எனவே, இவர்களைப் பின்பற்றி யாரும் சென்றிருக்க மாட் டார்கள். ஏன்? உரை எழுதவுங்கூட யாரும் முன் வங் திருக்கமாட்டார்கள். இங்கிலையில் தம் கொள்கையை எப். படியும் பரவச் செய்யவேண்டும் என நினைத்த இம்மூவரும், தாமே அவற்றிற்கு உரை எழுதினர். இவர்தம் உரையும் நூலும் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடாத வகையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/175&oldid=874446" இலிருந்து மீள்விக்கப்பட்டது