பக்கம்:தமிழ் உரை நடை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும் 9 அழகிய பாடலிலே தான் தாம் சொல்ல வந்த கருத்துக் களைச் சொல்லுகிருர். ஆயினும், புகழ் பாட அப்பாட்டே முடிந்த முடிபாகக் காட்டவில்லை. பாட்டு நாட்டில் பயின்று வந்த நெடுங்காலத்துக்கு முன்னே நாட்டில் இருந்தது உரையே என்பதை அவர் மறைக்கவில்லை; மறுக்கவு மில்லை. பாட்டுக்கு முன் உரையே பயின்ற வழக் கத்தில் இருந்ததென்பதைக் காட்டப் பாட்டுக்கு முன் உரைநடையினை வைத்தே காட்டுகின்ருர். 'வண்ணத் தாமரை போன்று வையத்துப் புகழ் பெற்று வாழ்வார் யார்?' என்று கேட்பின், அவர் உரையும் பாட்டும் உடைய ஒருவரே." என்கின்றர். எனவே, பாட்டால் புகழ் பாடுமுன் புலவர்கள் உரையாலேயே மன்னரையும் மற்றவரையும் புகழ்ந்து போற்றினர்கள் என்பது தெரி கின்றது. ஆகவே, பாட்டின்முன் தமிழ் நாட்டில் உரை கடை வழக்கத்தில் இருந்தது என்பது நன்கு தெரிகின்றது. சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ் நூற்றிதழ் அலரின் கிரைகண் டன்ன வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந் தோரை எண்ணுங் காலை உரையும் பாட்டும் உடையோர் சிலரே; மரையிலை போல மாய்ந்திசிஞேர் பலரே.' (புறம்-27) என்ற பாடலின் அடிகள் உரையுடைமையை நன்கு காட்டு கின்றன. வன்ருே? இனி, உரைக்கும் பாட்டுக்கு முள்ள வேறுபாட்டினைக் காண்போம். ஆங்கிலத்தில் உரைநடையை Prose என்று வழங்குகிருர்கள். Prose என்பதற்குச் சாதாரணமாக எழுதுவது என்றும், உள்ளதை உள் ள வாறே உரைத்தல் என்றும் பொருள் காண்கின்றனர். எனவே, ஒரு பொருளை இயல்பாக அதன் தன்மையால் போற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/18&oldid=874451" இலிருந்து மீள்விக்கப்பட்டது