பக்கம்:தமிழ் உரை நடை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தமிழ் உரை நடை, மரத்தின் நுனிக்கொம்பினையும், சேய்மைக்கண்ண தாகிய சந்திரனையும் ஒருங்கு காண்டலும், பளிங்கு முதலியவற்றின் உள் வைத்த பொருளைத் தடை யின்றிக் காண்டலுங் கூடுமாறென்னையெனின், கூறுதும்-கண் முதலிய இந்திரியங்கள் விளக்கொளி போல விடயத்தின் இயைந்தன்றி விளக்குதலின்மை யானும், இயைபு வேண்டாத வழுச் சுவர் முதலிய வற்ருன் மறைந்த பொருளையுங் காண்டல் வேண்டு மென்பது மேற்கூறினமாகலானுங் கண்ணிந்திரியத் திற்குக் காணுங்கால் விடயத்தோ டியைபுண்மை நியமமென்பது பெறப்பட்டது; படவே நுனிக் கொம்பினையுங் காண்டலும், பளிக்கு முதலிய வற்றின் உட்பொருளைக் காண்டலும் இயைந்தே காணும்மென்பது பெற்ரும் ஆண்டு நுனிக்கொம் பினையுந் திங்களினையும் ஒருங்கு கண்டேனென்று அநுபவ நிகழ்தல், தாமரையிதழ் நூற்றினையும் ஊசியான் ஒருங்கே போழ்ந்தேனென நிகழும் அநுபவம் போல விரைந்து செல்லுங் கால நுட்ப மறியாமையின் நிகழும் அபிமான மாத்திரையே எனவும், பளிங்கு முதலியன தூயவாகலாற் சுவர் முதலியன போலத் தடை செய்வனவன்மையின், அதிசூக்குமமாகிய கண்ணுெளி விளக்கொளி போல அவற்றின் உட்சேறல் கூடுமெனவும் நுண்ணுணர் வான் ஒர்ந்துணர்க.' - (பாடியம், 2-ஆம் சூத்திர உரை, பக். 240-41) இக்காலத்திலே வாழ்ந்த மற்ருேர் உரையாசிரியர் சைவ சொக்கப்ப நாவலராவர். இவர் தஞ்சைவாணன் கோவைக்கு உரை எழுதியுள்ளார். இவரையன்றித் திருத்தணிகை கந்தப்பையர் மக்களாகிய விசாகப் பெரு, மாளேயர், சரவணப் பெருமாளேயர் என்ற இருவரும் தமிழ் உரைநடைக்குத் தொண்டு செய்தார்கள் என்ப தைத் திரு. வ. சு. செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/185&oldid=874457" இலிருந்து மீள்விக்கப்பட்டது